எம்ஜிஆர் 105வது பிறந்தநாள்: ஓபிஎஸ், இபிஎஸ் மலர்தூவி மரியாதை

அதிமுகவினர் மற்றும் எம்ஜிஆர் ரசிகர்களால் நாடு முழுவதும் எம்ஜிஆர் பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது.  சென்னை  ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் எம்.ஜி.ஆரின் 105வது பிறந்தநாள் கொண்டாட்டம் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அங்குள்ள எம்.ஜி.ஆரின் சிலைக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி மலர் தூவி மரியாதை செலுத்தினர். அதிமுக முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்றுள்ளனர்.

scroll to top