கோவை மாநகராட்சி 22 ஆவது வார்டுக்குட்பட்ட மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில், கோவையை தூய்மையாக வைத்துக் கொள்ளும் நோக்கோடு, தமிழக அரசின் ” என் குப்பை ..! என் பொறுப்பு.. ! ” எனும் திட்டத்தை பொதுமக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு பரப்புரை நிகழ்ச்சியின் துவக்க விழா நடைபெற்றது. துவக்க விழாவில் மாமன்ற உறுப்பினர் கோவை பாபு கலந்து கொண்டு பள்ளி மாணவர்களிடம் உரையாற்றி மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கினார் இந்நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர் , பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்
” என் குப்பை ..! என் பொறுப்பு.. ! ” மாமன்ற உறுப்பினர் கோவை பாபு பள்ளி மாணவர்களிடம் விழிப்புணர்வு பரப்புரை ஆற்றினார்
