எங்கள் முதல்வர் எங்கள் பெருமை புகைப்பட கண்காட்சியை பார்வையிட்ட நாட்டுப்புற கலைஞர்கள் செந்தில் – ராஜலட்சுமி

vlcsnap-2023-04-10-17h18m23s224.png

​​கோவையில் நடைபெற்று வரும் எங்கள் முதல்வர் எங்கள் பெருமை புகைப்பட கண்காட்சியை நாட்டுப்புற கலைஞர்கள் செந்தில் – ராஜலட்சுமி பார்வையிட்டனர்.

கோவை வ உ சி மைதானத்தில், எங்கள் முதல்வர் – எங்கள் பெருமை வரலாற்று சிறப்பு மிக்க புகைப்பட கண்காட்சி கடந்த 7 ந்தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த கண்காட்சியை தினமும் பல ஆயிரக்கணக்கானோர் கண்டுகளித்து வருகின்றனர்.இந்நிலையில் நாட்டுப்புற கலைஞர்கள் செந்தில், ராஜலட்சுமி ஆகியோர் இந்த புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டனர். அவர்கள் கூறுகையில் கோவை வ உ சி பூங்காவில் முதல்வர் 50 ஆண்டுகால புகைப்பட கண்காட்சி பார்த்தோம், முதல்வருடைய உழைப்பு, அவர் கடந்து வந்த பாதை, அனைத்தும் பார்க்கும்போது வியக்காமல் இருக்க முடியாது. உண்மையில் அவர், பட்ட கஷ்டங்கள் உழைப்புக்கு கிடைத்த மக்கள் கொடுத்த அன்பு வெற்றியைத் தான் பார்க்க வேண்டும்” என செந்தில் கூறினார்.

தொடர்ந்து  ராஜலட்சுமி கூறும்போது,  “இதனை பார்க்கும் பொழுது ஒரு மணி நேரம் பார்த்தால் பத்தாது. முதல்வர் 50 ஆண்டுகால பொது வாழ்க்கையில் தன்னை அர்ப்பணித்த அந்த புகைப்படங்கள் பேசுகிறது. முதல்வர் திட்டத்தை மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பதற்கு எங்களுக்கு சந்தோஷமாக உள்ளது.  எங்களுக்கு பிடித்த  புகைப்படம் பெரியாருடன் முதல்வர் நின்ற புகைப்படம் எனக்கு மிகவும் பிடித்தது. பெருநகரங்களில் இது போன்ற புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டது போல,  கிராம பகுதிகளிலும் இது போன்ற கண்காட்சி நடத்தப்பட வேண்டும்” என தெரிவித்தனர்.

scroll to top