உழைப்புக்கு ஊனம் தடையில்லை:மாற்றுத்திறனாளி கோபால் அசத்தல்

DSC_7015-min-scaled.jpg

“மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் தேனீயைப் போல சுறுசுறுப்பாக உழைக்கும் கோபாலை பாராட்டாதவகள் இல்லை “ஆம்

கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள நல்லி செட்டிபாளையத்தில் தீபாவளிக்காக புது வகை பட்டாசுகள், அதே நேரத்தில் மிக குறைந்த விலையில் விற்பனை செய்துவருகிறார் கோபால் என்கின்ற கோபாலகிருஷ்ணன்.37 வயதான கோபால் பிறந்த 6 மாதத்திலேயே போலியோ நோய் தாக்கியதால் அவரது உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு,கை, கால்கள் வளர்ச்சி அடையவில்லை. அவரது பெற்றோர்கள் பல. மருத்துவர்களிடம் சென்று சிகிச்சை மேற்கொண்ட போதும் அவருக்கு சிகிச்சை எடுபடவில்லை.இதனால் கால் இரண்டையும் முட்டி போட்டுக் கொண்டு வந்தே தமது அன்றாட பணிகளை பார்க்கிறார் .இதனைப் பற்றி எல்லாம் கவலைப்படாத விவசாயிகளான அவரது பெற்றோர்கள் பள்ளியில் படிக்க வைத்தனர்.தொடர்ந்து கோபால் அஞ்சல் வழியில் பிகாம் பட்டம் பெற்றார் .தான் மாற்றுத்திறனாளி என்ற எண்ணம் அவரிடம் துளியும் இல்லை. தம் பிறந்த கிராமத்தில் சமுதாய சமூக நலப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் .நேரு இளைஞர் நற்பணி மன்றத்தின் தலைவராக உள்ளார.பலருக்கு உதவிகள் செய்து வருகிறார். சில அறக்கட்டளைகளுக்கு நிதி உதவியும் வழங்கி வருகிறார்.
கிராமப்புறங்களில் அதிகமாக பட்டாசு கடைகள் யாரும் வைப்பதில்லை. அதனால் மிக குறைந்த விலையில் பொது மக்களுக்கு பட்டாசு வகைகளை கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் அவர் மனதில் தோன்றவே,நண்பர்களின் உதவியுடன் சிவகாசிக்கே கோபால் சென்று பட்டாசுகளை வாங்கி வந்து, விற்பனை செய்து வருகிறார் கடந்த ஆறு
வருடங்களாக நல்லி செட்டிபாளையத்தில் பட்டாசு கடையை மிக குறைந்த விலையில் விற்பனை செய்து வருகிறார். இப்பகுதியில் உள்ள கிராமத்தினர் மட்டுமல்லாது கோவை மாவட்டம், ஈரோடு ,ஊட்டி, சென்னை,கேரளா என பல இடங்களில் இருந்தும் பட்டாசு வாங்க வருகின்றார்கள் . இவரது நிலைமையினையும், உழைப்பையும் கேள்விப்பட்ட பலரும் இவருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் வெளியூர்களிலிருந்து பட்டாசு வாங்க வருகிறார்கள் .இந்தாண்டு தீபாவளிக்காக புதிய வரவுகளாக பிளவர் பட்டாசு டப்பா ,மாப்பிள்ளை வெடி, மயில் வெடி, பாராசூட் கொடி என பெருநகரங்களில் கிடைக்காத பட்டாசுகள் கூட இந்த கிராமமான நல்லி செட்டிபாளையத்தில் கிடைக்கிறது .மேலும் ஆறு வகை பிளவர் பாட்,6 வகை சங்கு சக்கரம் ,சர வெடி, மத்தாப்பு, ராக்கெட் ,குழந்தைகளுக்கான பட்டாசு வகைகள், பெரியவர்களுக்கான ஃபேன்சி வகைகள், கிப்ட் பாக்ஸ்,10,000 வாலா போன்ற பட்டாசுகளும் இங்கு குவிந்துள்ளன. மாற்றுத்திறனாளியான கோபாலை ஊக்குவிக்க விரும்புபவர்கள் இந்த தீபாவளியை அவரிடத்தில் வாங்கி மகிழ்ச்சியாக தீபாவளியை கொண்டாட வேண்டும் என எண்ணுகிறார்கள்.
பட்டாசு வாங்க வரும் வாடிக்கையாளர்களிடம் மரக்கன்றுகளை இலவசமாக கோபால் கொடுக்கிறார். மேலும் குழந்தைகளுக்கு பேனா, பென்சில் ,ரப்பர், ஸ்கேல் ஆகிய பொருட்களையும் கொடுத்து வருகிறார்.இவரது இலக்கு கோவை மாநகரில் மிக குறைந்த விலையில் பட்டாசு விற்பனை செய்ய வேண்டுமென்பதே. அடுத்த ஆண்டு அதற்கான முயற்சியில் விரிவுபடுத்த போவதாக கோபால் கூறினார் .
தீபாவளி சீசனுக்காக பட்டாசு கடை வைத்திருக்கும் கோபால் மற்ற நாட்களில் சுவையான கார வகைகளை விற்பனை செய்து வருகிறார். தம் நிலைமையைப் பற்றி கவலை கொள்ளாது,தேனீயைப் போல சுறுசுறுப்பாக உழைக்கும் கோபால் மிகுந்த பாராட்டுக்கு உரியவரே.

scroll to top