உள்ளாட்சி தேர்தல்: திமுகவின் 9-ம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவானது, ஒரேகட்டமாக பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. பிப்ரவரி 22 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.  இதையடுத்து கட்சிகள் தங்களது வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டு வருகின்றன. அந்தவகையில், திமுகவின் ஒன்பதாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில், மதுரை, கோவை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிடுவோர் பட்டியல் இடம்பெற்றுள்ளன. முன்னதாக எட்டு கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ள திமுக, சென்னை மாநகராட்சிக்கான வேட்பாளர்கள் பட்டியலை இதுவரை வெளியிடாதது குறிப்பிடத்தக்கது.

scroll to top