உள்ளாட்சி அமைப்புகளுக்கு புதிய விதிகள் உருவாக்க தமிழக அரசு சிறப்புக் குழு அமைப்பு

ec.jpg

தமிழகஅரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு புதிய விதிகளை உருவாக்க குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவில், நகராட்சி, உள்ளாட்சி அமைப்பினர் இடம்பெற்றுள்ளனர்.  மேலும் கட்டட விதிகள், குடிநீர் விதிகள், கழிவுநீர் விதிகள், குடிநீர் விதிகள், திடக்கழிவு மேலாண்மை  விதிகள் உருவாக்கவும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. வார்டு மறுவரையறை, இட ஒதுக்கீடு, வரிவிதிப்பு, உரிய அனுமதி தொடர்பான விதிகளையும் இந்த குழு உருவாக்கும் என்று அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இக்குழு உருவாக்கும் புதிய விதிகளை தொடர்பான அறிக்கையை ஜூன் 10க்குள் சமர்பிக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

scroll to top