கோவை திமுகவிற்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் அமைச்சர் செந்தில்பாலாஜி பொறுப்பாளராக நிய மிக்கப்பட்ட பிறகு அரசுப் பணிகளும் சரி, மாவட்டத்தில் உள்ள கட்சிப்பணிகளும் சரி முன்பு இல்லாத அளவு சுறுசுறுப்பும் வேகமும் பெற்று உற்சாக நடைபோட்டு வருவதாக உடன்பிறப்புகள் மத்தியில் பொதுப்படையாக பேசப்பட்டு வருகிறது.
அரசு செயல்பாட்டில் குறைபாடு ஏதுமில்லை என்று மக்கள் சொல்லும் வண்ணம் அரசு அதிகாரிகளையும், ‘வரும் மாநகராட்சித் தேர்தலில் 100-ம் நமதே!’ என்று முழக்கமிடும் அளவு கட்சிக்காரர்களையும் அவர் அரவணைத்து செல்வதோடு, அதற்கான முஸ்தீபுகளோடு, கடுமையாக வேலை வாங்குவதாகவும் சொல் லப்படுகிறது.
மாநகராட்சித் தேர்தலில் செந்தல்பாலாஜி கட்சி்க் கான பலமாக முழுக்க முழுக்க நம்புவது வார்டுகள் தோறும் அமைக்கப்பட்டுள்ள கட்சியின் பூத் கமிட்டி ஏஜன்ட் எனப்படும் பாக முகவர்களைத்தான்.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் உட்கட்சிக்குள் நிலவும் அதிருப்தி, புதியவர்களுக்கு சீட் கொடுக்கப்பட்டதால் வந்த கோபம், இன்னபிற சங்கதிகளுக்காக கட்சியின் நிர்வாகிகள் பலரும் தன் ஆயுதத்தை கீழே போட்டு விட்டனர். தேர்தல் காலத்தில் அரும்பாடு பட வேண்டிய பூத் கமிட்டி முகவர்களை கண்டுகொள்ளாது விட்டுவிட்டனர். கட்சி தலைவர்கள் பிரச்சாரம், வாக்காளர்கள் சந்திப்பு, வார்டு அளவில் தேர் தல் பணி செய்யும் கட் சிக்காரர்களுக்கான செல வினங்கள். வாக்குக்கு பணம் எதிர்பார்க்கும் வாக்காளர்கள் போன்ற அம்சங்களில் நிறைய குளறுபடிகளை திட்டமிட்டே செய்துள்ளனர்.
இது அப்போதைய ஆளுங்கட்சி அதிமுகவி்றகு வசதியாகப் போய்விட்டது. அவர்கள் ஒரு வார்டில் 10 வாக்குச்சாவடிகள் இருக்கிறதென்றால் ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் 13 பேர் சுமார் 3 மாத காலம் துறு துறுவென்று இயங்கினார்கள். இவர்களின் பணிக்கு அன்றாட ஊதியமும் வழங்கப்பட்டது. பூத்தில் வரும் 1000 வாக்காளர்களையும் அன்றாடம் சந்தித்தார்கள். அவர்களின் தேவைகளை கேட்டு பூர்த்தி செய்தார்கள். பணம் கொடுத்தால் ஓட்டுப் போடும் மனநிலை இருந் தவர்களை இனம் கண்டு கொண்டு, அவர்களின் தேவையையும் நீக்கமற நிறைவேற்றினார்கள்.
இந்த விஷயத்தில் அவர்களின் நெட்ஒர்க் பக்காவாக இருந்தது. அதனால்தான் திமுக கோவையில் 10-க்கு 10 தொகுதிகளில் திமுக தோல்வியை சந்தித்தது என்பதை இன்னமும் உறுதியாக நம்புகிறது திமுக தலைமை. அதையே தோல்வியைத் தழுவின வேட்பாளர்களும் தலைமையில் அவரவர் அனுபவம் வாயிலாக அழுத்தமாக தெரிவித்தனர்.
பாம்பின் கால் பாம்பறியும். அதிமுகவின் பூத் கமிட்டி செயல்பாடுகளை அக் கட்சியை சார்ந்தவர்களே அறியமுடியும் என்பதை உணர்ந்தோ என்னவோ அதிமுகவிலிருந்து வெளியேறி திமுகவில் இணைந்து, கரூர் மாவட்டத்தை திமுகவின் கோட்டையாக்கி, முதல்வர் ஸ்டாலினின் தளபதிகளில் ஒருவராக விளங்கும் செந்தில்பாலாஜியையே கோவையின் பொறுப் பாளராக களமிறக்கி னார்கள். அவரும் மூன்று மாதங்களாக கோவையிலேயே வீடெ டுத்து தங்கி, கட்சியின் அத்தனை நிர்வாகிகளையும் சந்தித்துப் பேசி, வார்டு கள் தோறும் மக்கள் சந்திப்பு இயக்கங்களை அந்தந்1தப் பகுதியில் உள்ள கட்சிக்காரர்கள் மூலம் நடத்தி, அவர்கள் குறைகளை கேட்டு பட்டியலிட்டு கம்யூட்டரில் ஏற்றி, அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் கொடுத்து வருகிறார்கள்.
ஒரு வீட்டில் பிரிட்ஜ், வாஷிங்மெசின், டீவி, கேஸ் ஸ்டவ்.. இப்படி எது இல்லையோ அதைக்குறிப்பிடச் சொல்லி, விண்ணப்பமாக பெற்று சமர்ப்பிக்கிறார்கள். இதன் மூலம் இந்த பொருட்கள் எல்லாம் அரசே தரும் என்பது போல ஒரு மாயையேய உருவாக்கி வருகிறார்கள். இது எந்த அளவுக்கு செயல்படுகிறது என்பதை தலைமைக்கு காட்டவே கடந்த வாரம் உதயநிதியின் முன்னிலையில் சுமார் 25 ஆயிரம் பேரை கூட்டிக்காட்டினார் செந்தில்பாலாஜி. இதன் மூலம் செயலற்றுக்கிடந்த, இருக்கிறதோ இல்லையோ
என்றிருந்த திமுக பூத் கமிட்டிகள் ஏகோபித்த ஈடுபாட்டுடன் செயல்படுகின்றன என்பதை உதயநிதி முன்பு நிகழ்த்திக் காண்பித்து விட்டார் செந்தில் பாலாஜி. இது தலைமைக்கும் எட்டி விட்டது. அதன் பலனே வரும் உள்ளாட்சி மன்றத் தேர்தலில் 100-க்கு 100 வார்டு திமுக வசம்தான் என்ற பேச்சு உடன்பிறப்புகள் மத்தியில் வலம் வருகிறது. ஆனால் அதையும் தாண்டி அவநம்பிக்கைகளும், அதிருப்தியும் அக்கட்சி நிர்வாகிகளுக்குள்ளேயே வெடித்து வருகிறது. இது குறித்து அக்கட்சியினர் சிலர் பேசும்போது, “அமைச்சர் ஆக்கப்பூர்வமாக செயல் படுகிறார். இங்கே சோம்பிக் கிடந்த கட்சியினரை விரட்டி விட்டு வேலை வாங்குகிறார் என்பதெல்லாம் மறுக்க முடியாத உண்மை. ஆனால் எங்களை விரட்ட கரூரிலிருந்து ஆட்களை கொண்டு வந்து இறக்கியிருப்பதைத்தான் எங்களால் ஜீரணிக்க முடியவில்லை!’’ என்று குறிப்பிட்ட அதற்கான காரண காரியங்களை விளக்கினர்.
“கோவை மாநகராட்சியில் மொத்தம் 100 வார்டுகள். ஒவ்வொரு வார்டிலும் 10 வாக்குச்சாவடிகள் (பூத்) உள்ளன. ஒவ்வொரு பூத்துக்கும் சுமார் 1000 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களை அன்றாடம் சந்திக்க, அவர்கள் குறைகளை எழுதி விண்ணப்பங்களாக வாங்க பூத்துக்கு 10 பேரை பூத் கமிட்டியாக நியமித்துள்ளார்கள். இந்த பூத் கமிட்டிகளை கண்காணிக்க பூத்துக்கு 2 பேரை தனது ஆட்களாக நியமித்துள்ளார் அமைச்சர். அவர்கள் அத்தனை பேரும் கரூரைச் சேர்ந்தவர்களாக உள்ளார்கள். இவர்கள் வார்டில் சிலர் வார்டி லேயே வீடு எடுத்து தங்கியுள்ளார்கள். சிலர் கொடீசியா அருகில் அமைச்சர் தங்கியுள்ள பங்களாவிலேயே அலு வலகப் பணியில் உள்ளனர்.
இவர்கள் பெறும்பாலும் வார்டில் உள்ள கட்சி கிளை அலுவலகத்திற்கு அன்றாடம் வந்து விடுகிறார்கள். அங்கே பூத் முகவர்கள் எல்லாம் போய் அன்றாடம் தாம் சந்தித்த நபர்களை , அவர்களுக்கான குறைகளை விண்ணப் பங்களாக பெற்ற விவர ங்களை தெரியப்படுத்த வேண்டும். பூத் வாரியாக வாக்காளர்களிடம் பெற்ற விண்ணப்பங்களை (முதியோர் பென்ஷன் வரவில்லை. ரேசன் கார்டு வரவில்லை. மாற்று த்திறனாளி உபகரணம் கிடைக்கவில்லை. மகளிருக்கு தையல் மிஷின் இல்லை இப்படியான குறைகள்) அளிக்க வேண்டும். அதை அவர்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்து அமைச்சரின் பார்வைக்கு கொண்டு போவார்கள்.
கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக இந்த பணிகள் நடக்கிறது. இந்த வகையில் பூத் கமிட்டி செலவுக்கு வாரந்தோறும் ரூ. 1000 வழங்கப்படுகிறது. இதை 10 பேர் பங்கிட்டால் ரூ. 100 கிடைக்கும். இந்த ரூ.100 ஐ ஒரு வார காலத்திற்கு பயன்படுத்தினால் இன்றைய தேதிக்கு டீ செலவுக்கு கூட ஆகாது.
10 வருடம் கழித்து ஆட்சிக்கு வந்திருக்கிறோம். எங்கள் கையில் டாஸ்மாக் பார் கூட கிடையாது. வேறு வகை வருமானமும் கிடையாது. இந்த நிலையில் கட்சிக்காரர்கள் எத்தனை பேர் சொந்தமாக பாக்கெட்டில் வைத்து செலவு செய்யும் சக்தியில் உள்ளார்கள்?
டாஸ்மாக் பார் இதுவரை அதிமுகவினர் கையிலும், அவர்கள் ஆதரவாளர்கள் கையிலும் இருந்தது. அதன் மூலம் மாதந்தோறும் அக்கட்சி கிளை வட்ட நிர்வாகிகளுக்கு ஒரு தொகை வந்து கொண்டிருந்தது. அதன் மூலம் அவர்கள் கட்சித் தொண்டர்களை இது போன்ற பூத் கமிட்டி செலவினங்களை சமாளிக்க முடிந்தது. இந்த முறை நம்ம ஆட்சி. டாஸ்மாக் பார்களாவது நம் கைக்கு வரும் என்று எதிர்பார்த்திருந்தோம். ஆனால் அது கரூர் காரர்களுக்கே கொடுக் கப்பட்டுள்ளது. இதனால் எங்கள் நிலைமை ரொம்ப மோசமாகி விட்டது. நாங்கள் கரூர்காரர்கள் கையை எதிர்பார்த்தே செயல்பட வேண்டியிருக்கிறது.
நாளைக்கே தேர்தல் வந்தாலும் எங்களை முன்னால் விட்டு பின்னால் இவர்கள் கண் காணிப்பார்கள். தேர்தல் செலவு தொகைகளும் அவர்கள் கைக்கே வரும். இப்படி இருந்தால் உள்ளூர்காரர்களை வாக்காளர்கள் எப் படி மதிப்பார்கள்? பொதுக்கூட்டம், கட்சி விழா, அரசு விழாவுக்கு கூட்டம் சேர்த்தும் விஷயத்தில் கரூர், திருச்சி, காங்கயம், வெள்ளகோயில் கதை எல்லாம் வேறு. அங்கே கூலிக்கு ஆள் கிடைப்பது சுலபம்.
அதிகபட்சம் நூறு நாள் வேலை திட்டத்தில் உள்ளவர்கள் எல்லாம் வந்து விடுவார்கள். ரூ. 200, ரூ. 300 என குறைந்த தொகை கொடுத்தாலே போதுமானது. அதையும் தாண்டி அங்கே ஜாதி ரீதியாக ஒன்றாவார்கள். கோவையில் அது முடியாது. இது தொழில் நகரம். ஜாதியாகவும் பார்க்க முடியாது. ஒரு கூட்டத்திற்கு ஆள் திரட்டி னாலே தலைக்கு வண்டி வாகனம், சாப்பாடு, குவார்ட்டர்ன்னு கணக்குப் போட்டா ஆளுக்கு ரூ. 1000 தாண்டி விடுகிறது. இது எல்லாம் பார்த்துப் பார்த்து கட்சி வேலை செய்யறதே கஷ்டமா இருக்கு!’’ என்று தெரிவித்தனர்.
இது குறித்து அமைச்சரின் ஆதரவாளர்கள் கருத்துத் தெரிவிக்கும்போது, “கடந்த தேர்தலில் முறையாக உள்ளூர்காரர்கள் பிரச்சாரம் செய்யவில்லை. பூத் கமிட்டி கூட பல இடங்களில் அமையவில்லை. பலர் எதிர் அணிக்கு விலை போனதும் நடந்திருக்கிறது. கூட்டணிக்கட்சிகளிடமிருந் தும் பல புகார்கள். இதை யெல்லாம் அமைச்சர் தீர விசாரித்தே நடவடிக்கை எடுத்து வருகிறார். தற் போது பழைய விவகாரம் எல்லாம் கலைந்து கட்சிக்குள் புது ரத்தம் பாய்ச்சப்பட்டு வருகிறது. அது கோவையின் 100-க்கு 100 வெற்றிக்கு பலமாகவே அமையும். பார்த்துக் கொண்டே இருங்கள்!’’ என்று தெரிவித்தனர்.
எது எப்படியோ, உள் ளாட்சித் தேர்தல் பணியில் வெளியூர்காரர்கள் ஈடுபடு வது கோவை திமுகவிற்கு பலமா பலஹீனமா? என்பது உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டு, தேர்தல் வந்து, வாக்காளர்கள் வாக்களித்து, அந்த வாக்குகள் எண்ணப்படும் நாளில் தெரிந்து விடும்.