உயர்நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று.சோழவந்தான் பெரிய கடை வீதியில் ஓபிஎஸ் அணி நிர்வாகிகள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்.

Pi7_Image_WhatsAppImage2022-08-17at1.33.33PM.jpeg

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக ஜூன் 23ஆம் தேதி இருந்த நிலையே தொடரும் என்று உயர் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து சோழவந்தான் மாரியம்மன் கோவில் முன்பாக அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினார் இதில் சோழவந்தான் பகுதி நிர்வாகிகள் ராமசாமி, தென்கரை திரவியம், கட்டக்குளம் வேலுச்சாமி, சோழவந்தான் பேரூர் முத்து, டீக்கடைராஜேந்திரன், மார்க்கெட் ராஜேந்திரன், ஆடியோ ராஜன், மீன் ஜெயபாண்டி ,பேட்டை விஜயன் ,மகேந்திரன், கல்லணை ,இரும்பாடி ஈஸ்வரன், மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள்

scroll to top