உத்திரபிரதேசத்தில் நடந்த துப்பாக்கி சூடு நடத்தியதைக் கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

WhatsApp-Image-2021-10-05-at-2.20.37-PM.jpeg

திருப்பரங்குன்றம் அருகே திருநகரில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடந்தது.

ஆர்பாட்டதில், 80 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா, திருநகர் இரண்டாவது பேருந்து நிறுத்தத்தில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உத்திரப்பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டில் பலியான 5 விவசாயிகளுக்கு ஆதரவாக, கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பரங்குன்றம் தாலுகா செயலாளர் ராஜு தலைமையில் நடைபெற்றது. மாநகர் மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன், புறநகர் மாவட்ட செயலாளர் விஜயராஜன் உள்ளிட்ட 80 க்கும் மேற்பட்டடோர் கலந்து கொண்டனர்.

scroll to top