உதய்பூர் படுகொலை தொடர்பான பதிவுகளை நீக்க சமூக வலைதள நிறுவனங்களுக்கு அரசு உத்தரவு

1656646507903.jpeg

டைம்ஸ் நவ்,  ஆங்கிலத் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் முகமது நபி குறித்து பாஜக செய்தி தொடர்பாளராக இருந்த நூபுர் ஷர்மா கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக பயங்கரவாதிகள் இருவர், உதய்ப்பூரில் டெய்லர் ஒருவரை தலை துண்டித்து படுகொலை செய்து, வீடியோ வெளியிட்டனர். இதுதொடர்பாக மாறுபட்ட கருத்துக்கள்  சமூக வலைதளங்களில் பரபரப்பப்பட்டு வருகின்றன.

இந்த கொலை தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பலரும் பகிர்ந்து வருகின்றனர். இதேபோல், கன்னையா லால் படுகொலையை நியாயப்படுத்தி யும், அதற்கு எதிராகவும்  பலரும் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர். இதனால் மக்களிடையே மீண்டும் மோதல்கள் உருவாகும் ஏற்படும் வாய்ப்பு ஏற்படும் என்பதால், அந்த படுகொலையை பாராட்டியோ நியாயப்படுத்தியோ பதிவிடப்பட்டுள்ள பதிவுகளை உடனடியாக நீக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களுக்கு மத்திய  தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

scroll to top