உடல்நல குறைவால் அமைச்சர் துரைமுருகன் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி

202106161139224304_AIADMK-candidate-case-against-Minister-duraimurugans_SECVPF.jpg

தமிழக நீர்வளத்துறை அமைச்சரும், திமுக பொதுச்செயலாளருமான துரைமுருகன் அவ்வப்போது உடல்நலப் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவது வழக்கம். தற்போது கடும் காய்ச்சல் காரணமாக அவதிப்பட்ட நிலையில், அவரது குடும்பத்தினர் அவரை சென்னை அப்போலோ மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

அப்போலோவில் அவருக்கு மருத்துவமனையில்  சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவரது உடல் சீராக இருப்பதாக தெரிவித்துள்ள அவரது குடும்பத்தினர் காய்ச்சல் குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பிய பின்னர் அவர் வீடு திரும்புவார் என்று தெரிவித்துள்ளனர்.

scroll to top