இயக்குனர் ரா.சரவணன் இயக்கத்தில் நடிகை ஜோதிகா, சசிகுமார், சமுத்திரக்கனி, சூரி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளிவந்த திரைபடம் ‘உடன்பிறப்பே’. இதை சூர்யாவின் 2டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இது ஜோதிகாவின் 50-வது படமாகும். ஆயுத பூஜையை முன்னிட்டு இப்படம், அமேசான் ஓடிடி தளத்தில் வெளியானது. இத்திரைப்படம் அண்ணன், தங்கையின் பாசத்தை முதன்மையாக கொண்டுள்ளது .ஜோதிகா நடிப்பில் பாசமான அண்ணன் – கணவர் என இரண்டு பேரும் விட்டுக் கொடுக்காமல் பேசும் இடத்தில் எல்லாம் நம்மை மிகவும் கவர்கிறார். குறிப்பாக கணவர் பேசினால்தான் நான் அண்ணன் கூட பேசுவன் என்று பிடிவாதம் செய்து கொண்டு இருக்கும் காட்சி முதல் படத்தின் இறுதியில் அவர் சசிகுமாரை அண்ணா என்று சொல்லி கட்டிப்பிடித்து கதறும் காட்சிகள் நமக்கு கண்களில் கண்ணீரை வரவழைத்தது.சமுதிரக்கனி மச்சான் செய்வது சரி உங்கள் தங்கை பாசத்துக்கு நான் அடிமை என சொல்லி வீட்டோடு மாப்பிள்ளையாக போய் சந்தோஷமாக இருக்கும் போதும் சரி. சசிகுமாரின் மேல் கோபம் வந்து வீட்டை விட்டு வெளியே சென்று சசிகுமாரை வெறுக்கும் காட்சிகளில் நடிப்பின் உச்சத்தை காட்டியுள்ளார். படத்தில் நடித்த மற்ற துணை நடிகர்கள் அனைவரும் கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளனர்.படத்தின் முதல் பாகத்தில் கதை மற்றும் திரைக்கதை அருமையாக இருந்தது. ஆனால் படத்தின் இரண்டாம் பாகம் பல இடங்களில் நமக்கு சலிப்பை கொடுக்கிறது.முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் இல்லை.டி.இமானின் இசை படத்திற்கு சிறப்பு தந்துள்ளது.