உச்சி மாகாளியம்மன் கோவில் வடகத்தி காளியம்மன் பங்குனி திருவிழா பால்குடம்

WhatsApp-Image-2023-04-04-at-19.18.05.jpg

மதுரை மாவட்டம் சோழவந்தான் பூ மேட்டு தெரு உச்சிமாகாளி அம்மன், வடக்கத்தி காளியம்மன் கோவில் பங்குனி திருவிழா கடந்த வாரம் காப்பு கட்டுதலுடன் . பக்தர்கள் தங்களது விரதத்தை துவக்கினர். தொடர்ந்து ஒவ்வொரு நாள் இரவும் அம்மனுக்கு பால் ,தயிர் ,நெய் வெண்ணெய் உள்ளிட்ட ‌ அபிஷேகங்கள் நடைபெற்று தீபா ராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. செவ்வாய்க்கிழமை காலை வட்டப் பிள்ளையார் கோவில் அருகே சுமார் 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் வைகை ஆற்றில் இருந்து பால்குடம் எடுத்து வரும் நிகழ்வு நடைபெற்றது. 46 என் ரோடு வழியாக மாரியம்மன் கோவில் சென்று திருக்கோவிலை வந்தடைந்தனர். அவர்களுக்கு எம்வி எம் குழுமத்தார்கள் சார்பாக பிரசாதம் வழங்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டது. இதில் எம் வி எம் குழும தலைவர் மணி முத்தையா, நிர்வாகி வள்ளியில், நகர அரிமா சங்கத் தலைவர் பேரூராட்சி கவுன்சிலர் எம்வி எம் கலைவாணி பள்ளி தாளாளர் எம் மருதுபாண்டியன் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து புதன்கிழமை முளைப்பாரி நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலம் வந்து வைகை ஆற்றில் கரைக்கப்படும். ஏற்பாடுகளை பூ மேட்டு தெரு கிராம பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

scroll to top