உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியில் முன்னாள் மாணவர் சங்க கூட்டம் நடந் தது. கூட்டத்திற்கு கல்லூரி செயலர் வாலாந்தூர் பாண்டியன் தலைமை தாங்கினார். தலைவர் பால கிருஷ்ணன், பொருளாளர் வன ராஜா, நிர்வாக குழு உறுப்பினர்கள் குபேந்திரன், உதய பாஸ்கரன், திருமாவளவன், பாஸ்கர பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரியின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பொன்ராம் வரவேற்று பேசினார். முதல்வர் ரவி கூட்டத்தை துவக்கி வைத்து பேசினார். மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து முன்னாள் பயின்ற மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர். கூட்டத்தில் கல்லூரியின் வளர்ச்சி மற்றும் அடிப்படை தேவைகள் குறித்து விவாதிக்கபட்டது. ஊரக அறிவியல் துறை தலைவர் பேராசிரியர் தவமணி நன்றி கூறினார்.