உசிலம்பட்டி, திருமங்கலம் கல்வி மாவட்டங்களை ரத்து செய்ததை கண்டித்து ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர் பி உதயகுமார் அமர்ந்து தர்ணா

Pi7_Image_WhatsAppImage2022-09-19at12.56.11.jpeg

உசிலம்பட்டி , திருமங்கலம் ஆகிய கல்வி மாவட்டங்களை ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, இதை மீண்டும் செயல்பட வலியுறுத்தி சட்டமன்ற எதிர்க்கட்சித்துணை தலைவர் ஆர.பி.உதயகுமார் தலைமையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு  அமர்ந்து தர்ணா போராட்டம் நடைபெற்றது . அதனைத் தொடர்ந்து மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனுவும் கொடுக்கப்பட்டது. ஆர்.பி.உதயகுமார் கூறியதாவது: சாமானிய மக்களுக்காக கல்வியில் வளர்ச்சி காணும் வகையில் முன்னாள் முதலமைச்சர்          எடப்பாடியார், கடந்த 2018 ஆம் ஆண்டு புதிய 52 கல்வி மாவட்டங்களை உருவாக்கினார். இதில் திருமங்கலமும் அடக்கம் ஆகும் . இந்த புதிய கல்வி மாவட்டங்கள் உருவானதன் மூலம் மாணவ மாணவிகளுக்கு  மடிக்கணினியுடன் 14 சீருடைகள், மாணவர்களின் ஆசிரியர்கள் குறைகளை எளிதில் பெற்று நிர்வாக வசதி எளிமை பெறும் அது மட்டுமல்லாது, இது போன்ற கல்வி மாவட்டங்களில் உருவாக்கியது மூலம் கல்வி தேர்ச்சி விகிதம் அதிகமானது மேலும் தமிழ் முழுவதும்  80 பள்ளிகளை மாதிரி பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டன. இதில், உசிலம்பட்டி, திருமங்கலம் ஆகிய கல்வி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளும் தேர்ந்தெடுக்கப்பட்டன. தற்போது, தமிழக அரசின் சார்பில் 151 அரசாணை வெளியிடப்பட்டது. இதில், மதுரை மாவட்டத்தில் 10 தொகுதியில் நான்கு கல்வி மாவட்டங்கள் உள்ளன. ஆனால், அரசியல் காழ்புணர்ச்சி  காரணமாக, அதிமுக சட்டமன்ற தொகுதி உறுப்பினர்கள் உள்ள திருமங்கலம், உசிலம்பட்டி ஆகிய கல்வி மாவட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது பழிவாங்கும் செயலாகும். வாக்களித்த மக்களுக்கு துரோகம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே, குடிமராமத் திட்டம் ,தாலிக்கு தங்கம் திட்டம், மடிக்கண்ணி திட்டம் ,பெண்களுக்கு இருசக்கர வாகன திட்டம், அம்மா பரிசு பெட்டகம் ஆகியவற்றை நிறுத்தப்பட்டுள்ளது, எடப்பாடியார்  52 கல்வி மாவட்டங்களை உருவாக்கி சீர்திருத்த புரட்சி செய்த கல்வி மாவட்டங்களை ரத்து செய்துள்ளனர் யாரிடம் கருத்து கேட்காமல் சர்வாதிகாரபோக்குடன்  அரசு செய்துள்ளது ஆகவே இதை மீண்டும் செயல்படுத்திட வேண்டும் மீண்டும் உசிலம்பட்டி திருமங்கலம் கல்வி மாவட்டங்கள் செய்ய வேண்டும் என்று அவர் கூறினார். இதில் ,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ் எஸ் சரவணன், நிர்வாகிகள் இளங்கோவன், சுதாகரன், வெற்றிவேல், ஏ.கே.பி. சிவசுப்பிரமணியன், தனராஜன், ரவிச்சந்திரன், செல்லம்பட்டி ராஜா, காசிமாயன், திருப்பதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

scroll to top