உசிலம்பட்டி அருகே வீட்டில பதுக்கி வைக்கப்பட்டிருநத 6 கிலோ கஞ்சா பறிமுதல்

WhatsApp-Image-2021-10-06-at-8.36.15-PM.jpeg

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே மாதரை கிராமத்தில் வீட்டில் கஞ்சா பதுக்கி வைக்கப்
பட்டிருப்பதாக போலிசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, உசிலம்பட்டி நகர் காவல் நிலையப் போலீஸார் மாதரையில், அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்பொழுது 3 வீடுகளில், கஞ்சா விற்பனைக்காக வாங்கி பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

இது தொடர்பாக போலீஸார் மாதரையைச் சேர்ந்த பாண்டி மகன் சூர்ய பிரகாஷ்(27). ஜெயக்குமார் மனைவி ராஜேஸ்வரி(45). வாசுதேவன் மனைவி மதுரா(42). ஆகிய இரு பெண்கள் உள்பட 3 பேர் கைது செய்யபபட்டனர்.

இவர்களிடமிருந்து, 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யபபட்டது. இது குறித்து, உசிலம்பட்டி நகர் காவல் நிலையப் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

scroll to top