உசிலம்பட்டி அருகே சாலையில் பாலை கொட்டி போராட்டம்

WhatsApp-Image-2023-03-20-at-6.16.22-PM.jpeg

மதுரை மாவட்டம், செல்லம்பட்டி அருகே பால் கொள்முதல் விலையை உயர்த்தி தரக் கோரி பால் உற்பத்தியாளர்கள் சாலையில் பாலை கொட்டி போராட்டம் நடத்தினர்.

பால்கொள்முதல் விலையை உயர்த்தி தரக்கோரி, ஆவின் நிறுவனத்திற்கு எதிராக பால் நிறுத்த போராட்டம் அறிவித்து கடந்த மூன்று நாட்களாக தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கத்தினர் பால் நிறுத்த போராட்டம் நடத்தி வந்த நிலையில், நான்காவது நாளாக ஆவின் நிறுவனத்துக்கு எதிராக உசிலம்பட்டி – மதுரை சாலையில் உள்ள சர்க்கரைப் பட்டி கிராமத்தில் நடுரோட்டில் பாலை கொட்டி போராட்டம் நடத்தினர்.

ஆவின் நிறுவனம் பால் கொள்முதல் விலையை 33 ரூபாயிலிருந்து 40 ரூபாயாக உயர்த்தி தர வேண்டும் என கோரிக்கை விடுத்து, அரசிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்த நிலையில், பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த உடன்பாடு எட்டப்படாததால் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கத்தினர் மாநிலம் முழுவதும் ஆவின் நிறுவனத்திற்கு எதிராக பால்நிறுத்த போராட்டம் அறிவித்து தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர் .

கடந்த மூன்று நாட்களாக பால் நிறுத்த போராட்டம் நடைபெற்று வரும் நிலையில் ,அரசு இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை இந்த நிலையில் நான்காவது நாளான மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே உள்ள தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கத்தினர் கொள்முதல் விலையை உயர்த்தி தரக்கோரி, அரசிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்து எந்த நடவடிக்கையும் எடுக்காததால் இன்று உசிலம்பட்டி – மதுரை சாலையில் உள்ள சக்கரைப்பட்டி கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்க உறுப்பினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு சாலையில் பாலை கொட்டி போராட்டம் நடத்தினர்.

தொடர்ந்து, ஆவின் நிறுவனத்துக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். தொடர்ந்து, அரசு பேச்சுவார்த்தை நடத்தி தங்களது கோரிக்கையை நிறைவேற்றி தர வேண்டும் எனவும் பால் விலையை உயர்த்திக் கொடுக்க மறுப்பதால் தனியார் பால் நிறுவனத்தை நாடிச் செல்லக்கூடிய நிலை உருவாகியுள்ளதாகவும் மூன்று தலைமுறைகளாக ஆவின் நிறுவனத்திற்கு பால் கொடுத்து வந்த தாங்கள் தனியார் நிறுவனத்துக்கு செல்ல முடிவெடுப்பது வேதனையாக இருப்பதாகவும் எனவே, அரசு உடனடியாக தலையிட்டு தங்களது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என தெரிவித்தனர்.

scroll to top