உக்ரைனில் இருந்து தாயகம் திரும்பும் இந்தியர்களுக்கு விசா தேவையில்லை” போலந்து அறிவிப்பு

போர் நடைபெற்று வரும் உக்ரைனில் இருந்து தங்கள் நாட்டிற்குள் வரும் இந்தியர்களுக்கு விசா தேவையில்லை என்று போலந்து அறிவித்துள்ளது. இது தொடர்பாக இந்தியாவுக்கான போலந்து தூதர் ஆடம் புராகோஸ்கி கூறுகையில், ‘உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அங்கிருந்து இந்தியா திரும்பும் நோக்கத்தோடு போலந்து நாட்டிற்கு வரும் இந்தியர்களுக்கு விசா ஏதும் தேவையில்லை’ என்று தெரிவித்துள்ளார். உக்ரைன் நாட்டின் வான்வெளி மூடப்பட்டுள்ளதால், அண்டை நாட்டிற்கு தரைமார்க்கமாக வரும் இந்தியர்களை அங்கிருந்து விமானம் மூலம் மத்திய அரசு மீட்டு வருகிறது. உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்கும் நடவடிக்கைக்கு ஆப்பரேஷன் கங்கா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆபரேஷன் தொடர்ந்து நடைபெறும் என்று மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய் சங்கர் தெரிவித்துள்ளார்.

scroll to top