ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மீண்டும் உயிர்பெற்ற நாளை கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடுகிறார்கள். அன்றைய தினம் கிறிஸ்தவர்கள் அனைவரும் புத்தாடை அணிந்து கொண்டு ஆலயங்களுக்கு சென்று அங்கு நடைபெறும் சிறப்பு பிரார்த்தனை திருப்பலி ஆகியவற்றில் கலந்து கொளவதே அன்றைய சிறப்பு.
இந்த ஆண்டின் ஈஸ்டர் பண்டிகை இன்று நாடு முழுவதும் விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. அதன்படி, குமரி மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை மற்றும் ஏசு உயிர்ப்பு திருப்பலி நடைபெற்றது. மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு தேவாலயங்களில் ஈஸ்டர் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன.