இ.பி.எஸ் தலைமைக்கு வருவதை தடுப்பதே ஓ.பி.எஸின் நோக்கம்: ஜெயக்குமார் குற்றச்சாட்டு

jayakumar-16384585963x2-1.jpg

சென்னையில், இன்று மாலை சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், ஓபிஎஸ்-ஐ கடுமையாக விமர்சித்தார். அதிமுக அப்போது “பொதுக்குழு திட்டமிட்டப்படி 23-ம் தேதி நடைபெறும் என்றவர்,  இதற்காக பொதுக்குழு உறுப்பினர்களே 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கடிதம் கொடுத்துள்ளனர் என்று கூறியதுடன், அதிமுகவில்  அதிமுகவில் ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற எழுச்சி தமிழ்நாடு முழுவதும் உள்ள அதிமுகவினரிடையே உள்ளது என்றார்.

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கட்சி ஒற்றைத் தலைமைக்கு வரவேண்டும் என தொண்டர்கள் விரும்பும் நிலையில், அதற்கு மாறாக, எடப்பாடி தலைமையை எப்படியாவது தடுத்துவிட வேண்டும் என்ற எண்ணத்தோடு ஓ.பன்னீர்செல்வம் நீதிமன்றங்களுக்கு செல்வதும், கடிதம் எழுதுவதுமாக இருக்கிறார். ஓபிஎஸ்-ன் இந்த அநாகரிமான நடத்தையை எந்தவொரு அதிமுக தொண்டனும், நிச்சயமாக ஏற்கமாட்டான் என காட்டமாக விமர்சித்தார்.

scroll to top