இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்

WhatsApp-Image-2022-04-05-at-16.11.14.jpeg

விருதுநகரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 23 வயது இளம்பெண் ஒருவரை 4 பள்ளி மாணவர்கள் உட்பட 8 பேர் பாலியல் வன்கொடுமை செய்ததாக வழக்குபதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பல்வேறு தரப்பினரும், அரசியல் கட்சியினரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மக்கள் தேசம் கட்சி மற்றும் அகில இந்திய பறையர் பேரவை அமைப்பைச் சேர்ந்தவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் பேசும்போது, இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க கோரியும், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க கோரியும் வலியுறுத்தி பேசினர்.

scroll to top