இறைச்சிக்காக நாட்டு மாடுகள் கடத்தல்: கண்ணு குட்டியுடன் ஆட்சியர் அலுவலகத்தில் மனு

கால்நடைகளையும் நாட்டு மாடுகளையும் விதியை மீறி இறைச்சிக்காக கேரளாவிற்கு கண்டெய்னர் லாரியில் கடத்துபவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டி கோவை ஆட்சியரிடம்  ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தின் சார்பாக லோட்டஸ் மணிகண்டன் தலைமையில் கண்ணு குட்டியுடன் வந்து ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்
அவர்கள் அளித்த அந்த மனுவில்- நாட்டு மாடுகள் சட்டவிரோதமாக கண்டெய்னர் லாரிகளில் மாதம் ஒன்றுக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரை கேரளாவுக்கு இறைச்சிக்காக கடத்தப்படுகிறது.போக்குவரத்து சட்டப்படி கண்டெய்னர் லாரிகளில் 5 முதல் 8 மாடுகள் வரை தான் கொண்டு செல்ல வேண்டும். ஆனால் விதிகளை மீறி 30 மாடுகளை ஏற்றிச் செல்கின்றனர்.கோவை மாவட்டத்தில் மிருகவதை தடுப்பு குழுவை அமைத்து குற்ற செயல்களை தடுத்து நிறுத்த வாளையார் செக்போஸ்ட், கே.ஜி சாவடி செக்போஸ்ட்,  வழியாக விதிகளை மீறி நாட்டு மாடுகளை லாரிகளில் கடத்தியவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

scroll to top