சேலம் ஆத்தூரில் நடைபெற்ற திமுக அரசின் ஓராண்டு சாதனை பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் இருளை அகற்றி ஒளியூட்டும் சின்னமாக உதயசூரியன் விளங்குகிறது என கூறினார் மேலும், சொந்த ஊர் மக்களுக்கு முதலில் என்ன செய்தீர்கள்? என முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கேள்வி எழுப்பினார். மேலும் முதல்வரின் முகவரி திட்டத்தின் கீழ் 23,965 பேரின் கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது. கூட்டுறவு வங்கிகளில் 5 பவுனுக்கு கீழ் நகை கடன் பெற்ற 1.45 லட்சம் பேரின் 438 கோடி மதிப்பிலான கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 5.94 கோடி தடவைகள், பெண்கள் இலவசப் பேருந்து பயணம் மேற்கொண்டுள்ளார்கள். மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் 7.16 லட்சம் பேர் சிகிச்சை பெற்று உள்ளார்கள்.பால் விலை குறைப்பின் மூலமாக 2.75 லட்சம் பேர் பயனடைந்துள்ளார்கள்.இவ்வாறு கூறினார்