இராஜபாளையம் தனியார் மருத்துவமனையில் சென்னையைச் சேர்ந்த தம்பதியினருக்கு ஒரே பிரசவத்தில் மூன்று ஆண் குழந்தை

இராஜபாளையம் ஆண்டாள் மருத்துவமனையில், சென்னையைச் சேர்ந்த யோகேஷ் யாழினி தம்பதியினருக்கு ஒரே பிரசவத்தில் 3 ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது .தாயும் மூன்று ஆண் குழந்தையும் நலமாக உள்ளதாக பெற்றோர் மற்றும் பிரசவத்திற்கு உறுதுணையாக இருந்த ஆண்டாள் மருத்துவமனை தலைமை மருத்துவர் டாக்டர் ராஜாராம் தெரிவித்தார் .

மேலும் ,இதுகுறித்து டாக்டர் ராஜாராம் கூறும்பொழுது: சென்னையைச் சேர்ந்த யோகேஸ் யாழினி தம்பதியினர். யாழினி கருவுற்ற உடனே சென்னையில் உள்ள மருத்துவமனையில் பரிசோதனை செய்து பார்த்த பொழுது மூன்று கருவிகள் உருவாகியுள்ளதாகவும், ஆகையால் மூன்று குழந்தைகளைப் பெற்றெடுக்க இயலாது கருவை கலைத்து விடுங்கள் என கூறியதை அடுத்து அவர்கள் என்ன செய்வது என்று யோசித்த நிலையில் கடந்த 2017ம் ஆண்டு எங்களது ஆண்டாள் மருத்துவமனையில் ஒரே பிரசவத்தில் நான்கு ஆண் குழந்தைகள் பிறந்ததை செய்திகள் மூலம் அறிந்து.யோகேஷ் மற்றும் யாழினி தம்பதியினர் இராஜபாளையத்தில் வீடு எடுத்து தங்கி எங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களுக்கு குழந்தைகள் நல்லபடியாக பிறப்பதற்கான அனைத்து மருத்துவம் சம்பந்தப்பட்ட அறிவுரைகள் வழங்கி அவர்களை நாள்தோறும் கவனித்து வந்ததால், இன்று ஒரே பிரசவத்தில் 3 ஆண் குழந்தைகளை அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுத்துள்ளோம். குழந்தையும் தாயும் நல்ல நலமாக உள்ளனர் என தெரிவித்தார்.

குழந்தையின் தந்தை யோகேஷ் கூறும்போது, எனக்கு சொந்த ஊர் மதுரை என் மனைவி ஐடி கம்பெனியில் சென்னையில் பணியாற்றி வருகிறார். நான் சென்னையில் தனியார் பேங்கில் பணியாற்றி வருகிறேன். எங்களுக்கு கருவுற்றல் உடனே தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்தோம் அவர்கள் கருவை கலைக்க அறிவுறுத்தினார்கள். நாங்கள் செய்திகள் மூலம் இந்த மருத்துவமனை அறிந்து, இந்த ஆண்டாள் மருத்துவமனையில் பரிசோதனை செய்து கடந்த 8 மாதமாக இங்கேயே தங்கியிருந்து தற்போது 3 குழந்தையும் நல்லபடியாக எங்களுக்கு கிடைத்ததற்கு டாக்டர் மற்றும் மருத்துவமனை ஊழியர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்தார்.

scroll to top