பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 59 வது குருபூஜை, 114 வது தேவர் ஜெயந்தி விழா முன்னிட்டு இராஜபாளையத்தில் தென்காசி சாலை, சேத்தூர், தேவதானம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் திருவுருவ சிலைகளுக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் காளிமுத்து தலைமையில் கழக நிர்வாகிகள் மகளிரணியினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
இந்நிகழ்ச்சியில், நகரச் செயலாளர் செல்லபாண்டியன் ஒன்றியச் செயலாளர் குமார்
பேரூர் கழக செயலாளர் பாண்டி வர்த்தக அணிசெயலாளர் முருகன் மாவட்ட கழக இணைச் செயலாளர் முத்து விஜயராணி மற்றும் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.