இராஜபாளையத்தில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் நினைவு கோப்பையை தட்டிச் சென்ற உள்ள நகர கைப்பந்து கழகம்

WhatsApp-Image-2021-10-16-at-9.12.07-AM.jpeg

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் விருதுநகர் மாவட்ட கைப்பந்து கழகமும் இராஜபாளையம் நகர கைப்பந்து குழுவும் இணைந்து நடத்திய மாவட்ட அளவிலான கைப்பந்து சேம்பியன்ஷிப் 2021க்கான போட்டிகள் 14 ம் தேதிமற்றும் 15 ம் தேதிகளில் இரண்டு நாள் நடைபெற்றது .

மாவட்டத்தில் இருந்து 26அணிகள் இதில் பங்கேற்றன லீக் மற்றும் நாக்-அவுட் முறையில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது இறுதிப்போட்டியில் இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் தொடங்கிவைத்தார் .

இறுதி போட்டியில் முதலிடத்தை நான்கு செட்டுக்கு மூன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் இராஜபாளையம் நகர கைப்பந்து கழக A அணி வெற்றது .இரண்டாவது இடத்தை இராஜபாளையம் 11 ம் சிறப்பு காவல் படை காவலர் அணியும் .மூன்றாவது இடத்தை கலசலிங்கம் பல்கலைக் கழகமும் நான்காவது இடத்தை இராஜபாளையம் நகர கைப்பந்து கழக Bஅணியும் வென்றது இதில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பையும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன .முதல் இடத்தைப் பிடித்த அணிக்கு டாக்டர் சிவந்தி ஆதித்தனார் மற்றும் டாக்டர் இளங்கோவன் நினைவு கோப்பை வழங்கப்பட்டது இதில் வெற்றி பெற்ற அணிகளை இராஜபாைாயம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் பாராட்டி பரிசுகளை வழங்கினார்

scroll to top