இராசபாளையம் பகுதிகளில் இடிந்த வீடுகளை பார்வையிட்ட எம்.எல்.ஏ.

இராஜபாளையம் தொகுதியில், கடுமையான மழையின் காரணமாக வட்டாட்சியர் மூலமாக, பல வீடுகள் சேதமடைந்ததாக சட்டமன்ற உறுப்பினருக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து, மேலப்பாட்டம், கரிசல்குளம் ஊராட்சி, அம்பேத்கர் நகர் பகுதியிலும், நகர் பகுதியில், சோமையாபுரம், ஆவரம்பட்டி பகுதிகளிலும் சேதமடைந்த வீடுகளை மக்கள் சட்டமன்ற உறுப்பினர் தங்கப்பாண்டியன், வட்டாட்சியர் ராமச்சந்திரன் மற்றும் சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அதிகாரிகள் முன்னிலையில், பார்வையிட்டார்.
அப்போது, எம்.எல்.ஏ.
அரசிடம் இருந்து கிடைக்க வேண்டிய உதவிகளை உடனடியாக செய்து தருமாறு வட்டாட்சியரைக் கேட்டுக்கொண்டார். மேலும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நான் இரு தினங்களுக்குள் நலத்திட்ட உதவிகள் வழங்குவேன் எனக் கூறினார். இந்நிகழ்வில், நகர திமுக செயலாளர் இராமமூர்த்தி, ஒன்றிய துணை சேர்மன் துரை கற்பகராஜ் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

scroll to top