2019 இல் மெக்கென்சி ஸ்காட்டிலிருந்து விவாகர த்து செய்ததைத் தொடர்ந்து ஜெஃப் பெசோஸ் 36 பில்லியன் டாலர் இழப்பை சந்தித்தார். இதுவே மிகப்பெரிய இழப்பாக கருதப்பட்ட நிலையில் தற்போது எலான் மஸ்க் அதனையும் கடந்துள்ளார். உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்த வாக்கெடுப்பு பதிவு மூலம் 2 நாட்களில் சுமார் ரூ.3.70 லட்சம் கோடியை இழந்துள்ளார்.அமெரிக்காவைச் சேர்ந்த பெரும்பணக்காரர் எலான் மாஸ்க், ஸ்பேஸ் எக்ஸ் டெஸ்லா மோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்களின் சி.இ.ஓ.வாக எலான் மஸ்க் உள்ளர். உலக பணக்காரர் பட்டியலில் முதலிடத்தில் உள்ள எலான் மாஸ்கின் சொத்து மதிப்பு 300 பில்லியன் டாலரை தாண்டியது. இதன் மூலம் உலக பணக்காரர் தர வரிசையில் 300 பில்லியன் டாலர் சொத்து மதிப்பை கடந்த முதல் நபர் என்ற சிறப்பையும் அவர் படைத்தார்.இரண் டாம் இடத்தில் இருந்த அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் சொத்து மதிப்பு 193 பில்லியன் டாலராக இருந்தது. இருவருக்கும் இடையி லான வித்தியாசம் மட் டுமே 143 பில்லியன் டாலராக இருந்தது. உலக பணக்காரர்கள் தரவரிசை பட்டியலில் 4ம் இடத்தில் உள்ள பில்கேட்ஸின் சொத்து மதிப்பை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், டெஸ்லா நிறுவனத்தில் உள்ள தனது பங்கில் 10 சதவீதத்தை விற்கலாமா என ட்விட் டரில்வாக்கெடுப்பு பதிவை எலான் மஸ்க் பதி விட் டார். அமெரிக்காவின் பெரும் பணக்காரர்கள் வைத்திருக்கும் பங்குகள் விற்கப்படும்போதுதான், அவற்றின் மீது வரி விதிக் கப்படுகிறது. அதற்கு பதி லாக முன்னதாகவே அத்தகைய பங்குகளைக் குறிவைத்து அதிகமான வரி விதிக்க வேண்டும் என்று ஜனநாயக கட்சி உறுப்பினர்கள் கோரிக் கையை முன்மொழிந்தனர். இதை தொடர்ந்து இந்த ட்விட்டை அவர் பதிவிட்டதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து டெஸ்லா பங்கு களின் மதிப்பு சரியத் தொடங்கியது. இதனால் 2 நாட்களில் 50 பில்லி யன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.3.70 லட்சம் கோடி) இழப்பை சந்தித்துள்ளார் என்று தகவல் வெளி யாகியுள்ளது. 2019 இல் மெக்கென்சி ஸ்காட்டிலி ருந்து விவாகரத்து செய் ததைத் தொடர்ந்து ஜெஃப் பெசோஸ் 36 பில்லியன் டாலர் இழப்பை சந்தித்தார். இதுவே மிகப்பெரிய இழப்பாக கருதப்பட்ட நிலையில் தற்போது எலான் மஸ்க் அதனையும் கடந்துள்ளார்.