இரண்டாவது முறையாக ஞாயிறு முழு ஊரடங்கு

இரண்டாவது ஞாயிறு ஊரடங்கு கோவையில் முழுமையாக அமல்படுத்தபட்டுள்ளதால் நகரின் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டு உள்ளது.அதன்படி, கோவையில் இன்று இரண்டாவது முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கை முன்னிட்டு நகரில் திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, அவிநாசி சாலை, பொள்ளாச்சி சாலை உள்ளிட்ட சாலைகள் வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. அதேபோல் முக்கிய கடை வீதிகள் உக்கடம், ரங்கே கவுண்டர் வீதி, டவுன் ஹால், காந்திபுரம், சிங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டுள்ளன.மாநகர பகுதிகளில் 700க்கும் மேற்பட்ட காவல்துறையினர்  பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

scroll to top