இயற்கை திணை உணவு விழிப்புணர்வு மாரத்தான்

Untitled-1-1.jpg

கொங்கு மண்டல திணை இயற்கை வேளாண் உணவு திருவிழா கோவையில் நடைபெற உள்ளதாக தி ரைஸ் எழுமின் அமைப்பினர் தெரிவித்தனர். கோவையில், ரைஸ் எழுமின் அமைப்பும் நண்பன் அறக்கட்டளையும், அன்னை பூமிக்கான அன்னையர்கள் அமைப்பினர், கோவை பத்திரிக்கையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர். இதில், மா ஜகத் கஸ்பர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஏப்ரல் 14 மற்றும் 16 தேதிகளில் 15 ஈரோடு சித்தோட்டில் பசுமை சங்கமம் நிகழ்வு நடைபெற உள்ளதாகவும், கோவையில் 14ஆம் தேதி நிர்மலா கல்லூரி வளாகத்தில் காலை 9.00 மணிக்கு 200க்கும் மேலான தினை உணவுகள் காட்சிப்படுத்துதல், மற்றும் 300க்கும் மேலான நாட்டு விதைகள் காட்சிப்படுத்துதல் மற்றும் விற்பனை அரங்குகள், மூலிகை சார்ந்த பொருளாதாரத்தை அமல்படுத்துதல் நிகழ்வு நடைபெற உள்ளது. மேலும், புதிய முயற்சியாக 500 வகையான சிறு தானிய இட்லி கண்காட்சியும் நடைபெற உள்ளது. இந்நிகழ்வில், கும்மி பாட்டு போட்டியும், கோலப்போட்டியும் நடைபெற உள்ளது. கொங்கு மண்டலத்தின், பெண் வேளாண் வெற்றித் தொழில் முனைவோரை விருது வழங்கி சிறப்பிக்க உள்ளோம். நிகழ்வின், சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு மின்சாரதுறை அமைச்சர் செந்தில் பாலாஜி பங்கேற்கிறார். ஏப்ரல் 16ஆம் தேதி காலை வஉசி மைதானத்தில் கொங்கு பசுமை சங்கமம் நிகழ்ச்சியினை மக்களுக்கு தெரிவிக்கின்ற வகையில், தினை உணவு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடத்தப்படுகிறது. 3 கி.மீ, 5 கி.மீ, 10 கி.ம மற்றும் 21 கி.மீ தூரம் என நான்கு பிரிவுகளில் ஆண்கள் மற்றும் பெண்கள் என தனித்தனியாக இப்போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு பதக்கங்களும், பங்கேற்கும் அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கப்படும் என்றார்.
இந்த நிகழ்ச்சிகள் உயிரின் சுவாசம் என்ற அறக்கட்டளையும் இனைந்து நடத்துகின்ற,
இந்நிகழ்வில் மரக்கன்றுகள், விதைப்பைகள் பரிசாக வழங்க உள்ளதாக தெரிவித்தார்.
பேட்டியின்போது, தி ரைஸ் அறக்கட்டளையின் நிர்வாகிகள் பாரதி ஆறுச்சாமி, அருள் குமாரசாமி, நண்பர்கள் அறக்கட்டளையின் நிர்வாகிகள் பிரீத்தா பிரபாகரன், சக்தி, விளையாட்டு பயிற்சியாளர் சீனிவாசன் ஆகியோர் உள்ளனர்.

scroll to top