இபிஎஸ், ஓபிஎஸ் இணைத்து வைத்த பிரதமர் மோடிஅடுத்த தேர்தலுக்கு அச்சாரம் போட்டு விட்டதா பாஜக?

Pi7_Image_20221112_110309-e1668348404550.jpg

THE KOVAI HERALD

எதிரும் புதிருமாக ஆகிவிட்ட அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், எதிர் கட்சித் தலைவர் இபிஎஸ் இருவரையும் அருகருகே ஒன்றாக நிற்க வைத்து பூங்கொத்தை வாங்கி இருக்கிறார் பிரதமர் மோடி. இதன் மூலம் அடுத்த தேர்தலுக்கு அதிமுகவின் இரு அணியை சேர்த்து வைப்பதோடு, அக்கட்சியுடன் கூட்டணிக் கும் அச்சாரம் இட்டிருக்கிறது பாஜக என்ற பேச்சு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
இரு அணியாக
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தால் இபிஎஸ்ம், ஓபிஎஸ்ம் இரு அணியாக பிரிந்து நிற்கின்றார்கள். ஏற்கனவே டிடிவி தினகரன் ஒரு அணியாகவும் சசிகலா ஒரு அணியாகவும் பிரிந்து நிற்கிறார்கள். இவர்கள் வேறு பிரிந்து நிற்பதால் பெரிதும் கவலைப்பட்டது பாஜகதான். ஏனென்றால் தமிழகத்தில் பலமான கட்சிகள் திமுகவும், அதிமுகவும்தான். இதில் திமுக ஆளுங்கட்சியாக இருப்பதோடு காங்கிரஸூ டன் பலம் பொருந்திய கூட்டணியாகவும் உள் ளது. இந்த நிலையில் அதிமுகவுடன் கூட்டணி சேர்ந்தால் மட்டுமே வரும் தேர்தலில் தமிழகத்தில் ஒரு சில தொகுதிகளையாவது பாஜக கைப்பற்ற முடியும் என நம்புகிறது. அதற்கு அக்கட்சி பலமாகவும் இருக்க வேண்டும். ஓபிஎஸ், இபிஎஸ் என்று அவர்கள் பிரிந்து நிற்பது தம் கூட்டணிக்கே வலிமையைக் குறைக்கும் என்று கருதுகி றது. மறைமுகமாக பாஜக ஓபிஎஸ்ஸிற்குத்தான் சப்போர்ட் செய்கிறது என்றாலும் அவருக்கு கட்சிக்குள் பலம் சுத்தமாக இல்லை. எனவே அவரை இபிஎஸ்ஸூடன் இணைய வைப்பது ஒன்றே வழி என்று அதற்கான முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கிறது.
அதற்கேற்ப ஓ. பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிச்சாமி உடன் இணை ந்து செயல்பட விருப்பம் தெரிவித்து வருகிறார். அவரின் ஆதரவாளர்களும் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். ஆனால் எடப்பாடி பழனிச்சாமியோ, பன்னீர் செல்வத்துடன் இனி இணைவதற்கு ஒரு சதவிகிதம் கூட வாய்ப்பு இல்லை என்று கறாராக சொல்லி வருகிறார். ஏனென்றால் இப்போதைய சூழ்நிலையில் ஒற்றைத் தலைமை, அதுவும் எடப்பாடி தலைமை என்பதற்கு பெருமளவு ஆதரவு கட்சிக்குள் பெருகி யிருக்கிறது. எனவேதான் இந்த காலகட்டத்தை அவர் விட்டு விடத் தயாரி ல்லை. அதை இபிஎஸ் ஆதரவாளர்களும் வழி மொழிகிறார்கள்.
பிரதமர் மோடி
இந்த இடியாப்ப சிக்கலில் இருவரும் ஒன்று படாததால் பிரதமர் மோடி இருவரையும் சந்திப்பதை தவிர்த்து வந்தார். கடந்த முறை பிரதமர் மோடி சென்னை வந்தபோது இருவரும் சந்திக்க அனுமதி கேட்டும் அனுமதி கிடைக்கவில்லை. ஆனால் பிரதமர் வந்தபோது எடப்பாடி பழனிச்சாமி வரவேற்றார். பிரதமர் புறப்படும் போது பன்னீர்செல்வம் வழி அனுப்பினார்.
அதேபோல் திண்டுக்கல் மாவட்டத்தில் காந்திகிராமம் பல்கலைக்கழகத்தில் இப்போது நடந்த 36 வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க வந்த பிரதமர் மோடியை சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி – ஓ. பன்னீர்செல்வம் அனுமதி கேட்டிருந்தார்கள். ஆனால் பிரதமர் மோடி இருவரையும் தனியாக சந்தித்து பேச நேரம் ஒதுக்கவில்லை .
ஆனால் அவர் வேறு காரியத்தை அரங்கேற்றி விட்டார். பிரதமரை வரவேற்கும் போதும் வழி அனுப்பும் போதும் யார் வரவேண்டும். யார் எங்கே நிற்க வேண்டும் என்பதை முன்கூட்டியே பிரதமருக்கு தெரிவிக்கப்படும். அதை பிரதமர் உறுதி செய்த பின்னர் தான் அந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்படும். அப்படி இருக்கும் போது எதிரும் புதிருமாக இருக்கும் இபிஎஸ்ம், ஓபிஎஸ்ம் அருகருகே நிற்பதை ஓ.பிஎஸ்.விரும்பினாலும் இபிஎஸ் கொஞ்சம் கூட விரும்ப மாட்டார்.
தேர்தல்
சட்டமன்றத்திலே கூட ஓபிஎஸ் அருகிலே அமர முதல் நாளில் தவிர்த்தார் எடப்பாடி பழனிச்சாமி. இந்த நிலையில் இருவரையும் அருகருகே நிற்க வைத்து அவர்களிடம் பூங்கோத்து வாங்கி இருக்கிறார் பிரதமர் மோடி. காந்திகிராமம் நிகழ்ச்சியை முடித்துவிட்டு மதுரை விமான நிலையத்திற்கு வந்த பிரதமர் மோடியை வழி அனுப்பும் போது இந்த நிகழ்வு நிகழ்ந்திருக்கிறது.
இதன் பின்னே புகைப் படத்தை ஓபிஎஸ் ஆதரவா ளர்கள் வலைத்தளங்களில் வெகுவேகமாகப் பகிர்ந்து வருகிறார்கள்.
இதற்கிடைேய சென்னை வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷாைவ ஓ.பி.எஸ். சந்தித்து ேபசினார்.
அதே வேகத்தில் பாஜக ஆதரவு வலைத்தளங்களும் இதையே முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டு வருகின்றன. ஓபிஎஸ், இபிஎஸ் இணைகிறார்கள், பாஜகவுடன் கூட்டணி அதிமுக அமைக்கும்போது வரும் தேர்தலில் நாற்பதுக்கு நாற்பது சீட்டுகளை தமிழகம், பாண்டிச்சேரியில் அள்ளும் என்றும் செய்திகளைப் பரப்பி வருகிறார்கள்.

KAMALA KANNAN S Ph. 92443 17182

scroll to top