அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று காலை 11.30 மணி அளவில் நீதிபதி ஜெயச்சந்திரன் பரபரப்பு தீர்ப்பு வழங்கினார். தீர்ப்பில், அதிமுக பொதுக்குழு, ஜூன் 23ந்தேதி நிலைப்பாட்டை பின்பற்ற வேண்டும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. அதனால் ஜூலை 11ந்தேதி எடப்பாடி கூட்டிய பொதுக்குழு செல்லாது என்பது உறுதியாகி உள்ளது. மேலும், அதிமுக பொதுக்குழு கூட்டத்தை கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்துதான் கூட்ட வேண்டும் என்று கூறியுள்ளதுடன், தேவைப்படின் நடுநிலையாளர் வைத்து கூட்டலாம் என்றும் தெரிவித்து உள்ளது.உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஜெயச்சந்திரன் தீர்ப்பு.
இபிஎஸ்-ஐ பொதுச்செயலாளராக தேர்வு செய்தது செல்லாது
