இபிஎஸ்ஸிற்கு மறைமுக ஆதரவுக் கரம் நீட்டுகிறதா திமுக? : பொதுக்குழு தர்ம யுத்ததின் பின்னணி அரசியல்

Pi7compressedadmk.jpg

TKE KOVAI HERALD

எல்லா பாதைகளும் ரோம் நகரை நோக்கி என்பார்களே. அது போல தமிழக அரசியலில் எல்லாப் பார்வைகளும் அதிமுக பொதுக்குழுவை நோக்கியே இருக்கின்றன. பாஜக, திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் இன்னபிற தமிழக அரசியல் கட்சிகளின் அகண்ட பார்வையும் அதை நோக்கித்தான். ‘என்ன நடக்கப் போகிறது? எடப்பாடி பொதுச் செயலாளர் ஆவாரா?’ என்பதுதான் இந்தப் பாதையில் ஒற்றைக் கேள்வி.
75 மாவட்ட செயலாளர்கள், 3000 பொதுக்குழு உறுப்பினர்கள், 50-க்கும் அதிகமான துணை அமைப்புகள், பல்லாயிரக்கணக்கான மாவட்ட, மாநில நிர்வாகிகள் கொண்ட தமிழகத்தின் மாபெரும் கட்சி அமைப்பாக செயல்படுகிறது அதிமுக. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழிநடத்திய கட்சி இப்போது அவர்கள் வகித்த பதவியான பொதுச்செயலாளர் என்ற பதவியை யார் அடைவது என்ற கடும் போட்டியில் நிற்கிறது. அதன் பெயர்தான் ஒற்றைத் தலைமை வேண்டும் என்ற கோஷம்.
3000 உறுப்பினர்களில் 2300 பேருக்கு மேல் இபிஎஸ்ஸிற்கு ஆதரவு. 65 மாவட்ட செயலாளர்கள் கையெழுத்திட்டே கொடுத்து விட்டார்கள். ஒற்றைத் தலைமை, அது அண்ணன் இபிஎஸ்தான் என்று. இன்னமும் ஏன் இந்த ஓபிஎஸ் இப்படி குட்டையைக்குழப்பிக் கொண்டிருக்கிறார் என்று திரும்பின பக்கமெல்லாம் ஒவ்வொரு அதிமுக தொண்டர்களும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். எப்படியாவது தானும், தன் பிள்ளையும் சசிகலா என்ற அடையாளத்தோடு முட்டி மோதி ஜெயித்து விட மாட்டோமா என்ற நப்பாசைதான் இதற்குக் காரணம்.
இந்த போராட்டத்தை தொடர்ந்து நடத்தி தள்ளிப் போடலாமே ஒழிய, அதை நிரந்தரமாக்க முடியாது. வெகு சீக்கிரமே இதையெல்லாம் உடைத்து இபிஎஸ் பொதுச் செயலா ளர் ஆகியே தீருவார் என்பது ஒவ்வொரு அதிமுக தொண்டர்களின் அடிநாதமாக இருக்கிறது. அதையேதான் கடந்த புதன், வியாழக்கிழமைகளின் இரவு பகல் பாராமல் நடந்த சட்டப் போராட்டமும், பொதுக்கு ழு கூட்டத்தின் செயல்பாடு களும், அடுத்து 11-ம்தேதி கூட இருக்கும் பொதுக்குழு கூட்ட அறிவிப்பும் கட்டியங்கூறுகின்றன.
எல்லா இடங்களிலும் ஒலித்த குரல்கள் இபிஎஸ், இபிஎஸ், இபிஎஸ்தான். ஓபிஎஸ் புறமுதுகிட்டு போனதை கட்சிக்காரர்கள் மட்டுமல்ல, தொண்டர்கள் மட்டுமல்ல, உலக அரசியல் அரங்கே கூடி நின்று வேடிக்கை பார்த்துள்ளது. இபிஎஸ்ஸை பாஜக அண்ணாமலை சந்தித்தார். அடுத்து அவர் ஓபிஎஸ்யும் சந்தித்தார். இருவருக்குமான சமாதான உடன்படிக்கைத் தூதுவராகத்தான் பாஜக இவரை அனுப்பியது என்றெல்லாம் செய்திகள். அது எல்லாம் சும்மா. இப்போதைக்கு பாஜக விற்கு ஜனாதிபதி தேர்தல் முன்னிற்கிறது.
அதற்கு சிந்தாமல் சிதறாமல் அதிமுகவின் வாக்குகள் வேண்டும். அவ்வளவே. தேர்தல் கமிஷன் வரை போய் இரட்டை இலைக்குப் பங்கம் வந்து விடக்கூடாது. எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள் தப்பித்தவறி துண்டாடப்பட்டு இரு அணியாய் நின்று சிதறி விடக்கூடாது. அதற்கான முஸ்தீபுகள்தான் அண்ணாமலை செய்கிறார். இதுதான் நிஜம். சரி இதை எதிர்கட்சிகள் எப்படி யான கண் கொண்டு பார்க்கின் றன. குறிப்பாக திமுக?
இன்றைக்கு அதிமுகவை விடுதலைச்சிறுத்தைகள் முதல் கம்யூனிஸ்ட்டுகள் வரை எதிரியா கப் பார்ப்பது ஒரே ஒரு விஷயத் தில்தான். பாஜக ஆதரவு நிலை.
அது மட்டும் தகர்ந்து விட்டால் பாதிக்கட்சிகள் திமுக விலிருந்து கழன்று கொள்ளும் என்பது அரசியல் நோக்கர்களின் தெளிவான பார்வை. அதற்கு பங்கம் வராமல் அதிமுகவை பாஜகவுடனே இணங்க விடுவதே மற்ற கட்சிகளை தன்னு டன் பிணைத்துக் கொண்டு ஓடுவ தற்கு வசதியானது என்பதை திமுக தலைமை முழு மையாக நம்புகிறது.
அதற்காக கட்சி என்ற அளவில் கூட்டணிக் கட்சிகள் என்ற நெருக்கமும், ஆட்சி என்ற நிலையில் கொஞ்சம் தள்ளியிருந்து பாஜக அரசுடனான இணக்கமும் திமுகவிடம் தெரிவதற்கு இதுதான் காரணம்.
கூழுக்கும் ஆசை; மீசைக் கும் ஆசை. மதவாதம் பேச வேண்டும். அதன் மூலம் சிறுபான்மை ஓட்டுக்களை அள்ள வேண்டும். தவிர கூட்டணிக்கட்சிகளும் வேறு வழியற்று தன்னுடனே பயணம் செய்ய வேண்டும் என்பது கட்சிக்கான அஜண்டா.
அதே மாதிரி சூட்சுமம் தான் இபிஎஸ், ஓபிஎஸ் விவகாரத்திலும் திரை மறைவு அரசியலை ஆளுங்கட்சியான திமுக கடைப்பிடிக்கிறது என சொல்லுகிறார் அதிமுகவின் மூத்த முன்னோடிகள் சிலர். எப்படி?
தமிழக அரசியலைப் பொருத் தவரை 55 ஆண்டுகாலமாக திமுக, அதிமுக ஆகிய இருகட்சிகளும் ஆட்சிப் பயணத்தின் இரட்டைத் தண்டவாளங்கள். ஒன்று எதிர்கட்சி என் றால் மற்றொன்று ஆளுங்கட்சி. இப்படியே நகர்ந்ததால்தான் திரும்ப இங்கே காங்கிரஸை வரமுடியாமலே செய்ய முடிந்தது.
இதில் அதிமுகவின் மக்கள் பலம் என்பது திமுகவிற்கே சவாலானது. அதிமுக ஆளுங்கட்சியாக இருந்தாலும், எதிர்கட்சியாக இருந்தாலும் அதுதான் நிலைமை.
1996-2001 வரை திமுகதான் ஆளுங்கட்சி என்றாலும் மீடியாக்களில் அதிக செய்திகளைப் பிடித்தது சட்டசபையில் எதிர்கட்சி அந்தஸ்தைக்கூட இழந்திருந்த அதிமுகதான். ஜெயலலிதா, அவர் மீதான வழக்குகள், கோடநாடு விவகாரம் இப்படித்தான் செய்திகள் பறந்தன. திமுக ஆளுங்கட்சியாக இருந்தால் கூட அதற்கென தனியான குழுக்கள் உண்டே தவிர, மக்கள் திரள் இல்லை. அதற்குக்காரணம் எம்ஜிஆர் என்கிற நட்சத்திரம் உருவாக்கிய மக்கள் அலை ஃபார்முலா. அதை ஜெயலலிதா என்கிற நட்சத்திரமும் கெட்டியாகப் பிடித்திருந்தார்.
இந்த சூழலில் அதிமுக உடைந்து சின்னா பின்னப் பட்டால் லாபம் யாருக்கு? என்பதை மற்றவர்கள் தெரிந்திருந்தார்களோ இல்லையோ, அதிமுக, திமுகவின் தலைமைப் பீடங்கள் உணர்ந்தே இருந்தன. திமுகவில் அந்த சாதூர்யம் ஸ்டாலினிடம் இருந்ததோ இல்லையோ, அதிமுகவில் ஓபிஎஸ், இபிஎஸ்ஸிடம் நன்றாகவே இருந்தது.
அதைவிட அவர்களின் கீழ் அணிவகுத்து நின்ற எம்.எல்.ஏ., எம்பிக்களிடம் நீக்கமற நிறைந்தே இருந்தது. அதுதான் கடந்த முறை தர்மயுத்தம், சமாதியில் தியான நிலை ஓபிஎஸ் நிகழ்த்தி அழிச்சாட்டியம் செய்த பின்பும் கூட இவர்கள் ஒற்றுமையாய் நிலைத்திருக்க வழிகோழி யது. சசிகலா சிறை சென்ற பிறகு அவரையும், அவர் வழிவந்த தினகரனையும் சுத்தமாக ஓரங்கட்டி கட்சியைத் தம் பக்கம் நிலை நிறுத்திக் கொள்ள உதவியது.
இப்போது நடக்கும் யுத்தத்தின் விளைவு கூட ஓபிஎஸ்ஸிற்குத் தெரிந்தே இருக்கிறது. அவர் இப்பவும் இரட்டைப் பதவியைத் தக்க வைத்துக் கொள்ள விளைவது தன் பதவியும், தன் மகனின் பதவியும் பறிபோகா மல் காப்ப தற்கும், தொட ர்ந்து கட்சிப் பொறுப்பின் மூலம் தன்னை நிலைநிறுத்தி தனக்கேதனக்கு என சுகபோகங் களை நிறுவிக் கொள்வதற்கும்தான்.
இதற்குப் பின் னணியில் சசிகலாவின் பெயரைப் பயன்படுத்து வதன் பின் னணியும் அவரிடம் இருக்கும் மாளாத பணம், சொத்துக்கள். அதன் மூலம் பாஜகவின் நெருக்கத்தையும் பிணை க்கிறார். இதை ஆளும் கட்சியான திமுகவும் கவனிக்காமல் இல்லை.
அது அதிகாரப் பகிர்வானா லும், நிதிப் பயன்பாடு ஆனாலும். அப்படி இப்போது இரட்டைத் தலைமையின் மூலம் நகர்த்துவதில் நிறையவே சிக்கல் வருகிறது. ஆளுங்கட்சி ஒற்றைத் தலைமையாயிருக்க, எதிர்கட்சி இரட்டைத் தலைமையாயிருந்தால் யார் முடிவுக்கு ஏற்ப இந்த பரிவர்த்தனைகளை நடத்துவது. ஓபிஎஸ்ஸிற்கு பங்கம் வராமல் பார்த்துக் கொண்டால் அவர் சத்தமில்லாமல் இவ்வளவு பெரிய அரசியல் கட்சியை பாஜகவிடம் கொண்டு போய் சேர்த்து விடுவார். அல்லது ஜெயலலிதா இடத்தில் சசிகலாவை வைத்து தானே எல்லா சக்திகளையும் இயக்கு பவராக ஓபிஎஸ் மாறி விடலாம்.
இரண்டும் ஆளும் திமுகவின் வளர்ச்சிக்கு எதிர்காலத்தில் ஆபத்தா னதே. தமிழகத்தில் காங்கிர ஸிற்கு அடுத்தபடியாக ஒரு தேசியக்கட்சியை வளரவிட்டால், அவர்களு டன் எதிர்காலத்தில் திமுக மோதுவது என்பது இயலாத காரியம் ஆகிவிடும்.
அடுத்தது சசிகலா. ஆயிரம்தான் இருந்தாலும் அவர் ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரி அந்தஸ்தைப் பெற்றவர். அவருக்காக சிறை சென்ற தியாகியாகவே மக்கள் பார்த்து விடலாம். போதாக்குறைக்கு அவரிடம் இருக்கும் மாளாத சொத்துக்கள், பணம்.
இன்னும் ஐந்தாறு தேர் தல்களுக்கு வாக்கா ளர்களுக்கு பொன்னும் பொருளுமாக அள்ளி விட முடியும். அதன் மூலம் எம்ஜிஆரைப் போல, ஜெயலலிதாவைப் போல, சசிகலாவும் ஒரு முறை முதல்வர் பதவியிலோ, பொதுச் செயலாளர் பொறுப்பிலோ அமர்ந்து விட்டால் நட்சத்திர அந்தஸ்து பெற்ற தலைவராக ஆகி விடுவார்.
பிறகு அவரையும் எதிர் கொள்வது திமுகவிற்கு கடினம். ஆளும் சாகக்கூடாது; தடியும் உடையக்கூடாது அதற்கு யார் பொருத்தமானவர் என்றால் எடப்பாடியை விட்டால் வேறு யாரும் கிடையாது. எனவே அவர் அதிமுகவின் ஒற் றைத் தலைமையாக உரு வெடுப்பதே எதிர்காலத்தில் திமுகவிற்கும் பாதுகாப்பு என்ற கருத்தோட்டமே ஆளும் அரசாங்கத்தில் நிலவுகிறது.
எனவேதான் இந்தப் பொதுக்குழு நடத்துவதற்கு இத்தனை கெடுபிடிகள், போலீஸ் பாதுகாப்பு, இத்தியாதி இத்தியாதிகளை மறைமுகமாக ஆளும் அரசாங்கம் சட்டம் ஒழுங்கு என்ற அடிப்படையில் செய்து கொடுத்துக் கொண்டிருக்கிறது.
எடப்பாடி பழனிசாமி என்ற பொதுச் செயலாளரை, முதலமைச்சரை யாரும் எந்த நேரத்திலும் அணுகலாம். மக்களோடு மக்களாக இருப்பார் என்பது அவர்களின் கணக்கு. கம்யூனிஸ்ட்டுகள், காங்கிரஸ் போன்ற மற்ற எதிர்கட்சிகளுக்கும் இவரே பொருத்தமானவராகத் தெரிகிறார்.
எந்த நேரமும் தன் ஆட் சிக்கு பங்கம் நேராமல் இருப்பதற்காகவும், தமிழகத்திற்கு நிதி கோரு வதற்காகவும், மத்திய அரசுடன் மாநில அரசு இணக்கமாக செயல் பட்டே ஆக வேண்டிய கட்டாயத்திற் காகவும் திமுக பாஜக பக்கம் சென்றுவிட் டால் இவர் களுக்கு ஒரே புகலிடம் அதிமுகதான். அங்கே சசிகலா இருந்தால் எப்படியிருக்கும்?
அவருக்கு முகம் காட்டிக் கொண்டு ஓபிஎஸ் இருந்தால் என்ன நடக்கும். அதுவே அக்கட்சியின் ஒற்றைத் தலைமையாக இபிஎஸ் இருந்தால் எப்படியெல்லாம் அணுக முடியும் என் பது இவர்களுக்குத் தெளி வாகவே தெரிகிறது. ஆக, எடப்பாடி பழனிசாமியின் கை அதிமுக தொண்டர்கள் மத்தியிலும், அக்கட்சி நிர்வாகிகள் மத்தியிலும் மட்டுமல்ல, எதிர்கட்சிகள் மத்தியிலும் கூட மறைமுகமாக ஓங்கியே இருக்கிறது. எனவே அவர் அதிமுகவின் பொதுச் செயலாளர் ஆகும் தூரம் வெகுதூரத்தில் இல்லை.
இதில் பாஜக செய்யும் அரசியலைப் பொருத்தே இரட்டை இலை, கட்சிப் பெயர், கொடி முடக்கும் வாய்ப்பு தேர்தல் கமிஷன் வாயிலாக இருக்கிறது.
அப்படியே நடந்தாலும் தன்னெழுச்சி பெற்று எடப்பாடி பழனிசாமியின் ஒற்றைத் தலைமையில் அதிமுக பயணித்தே தீரும் என்கிறார்கள் இது குறித்து நம்மிடம் பேசிய அரசியல் நோக்கர்கள்.

S.KAMALA KANNAN  Ph. 9244319559

scroll to top