இந்தோனேசியாவில் இன்று அதிகாலை பயங்கர நிலநடுக்கம்!

இந்தோனேஷியாவின் மெளமரே என்ற பகுதியில் 7.6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடலில் சுனாமி பேரலைகள் உருவாகக்கூடும் என பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தகவல் அளித்துள்ளது. இந்தோனேஷியா மௌமரேவில் இருந்து 95 கி.மீ வடக்கே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.6 ஆக பதிவாகி உள்ளது. இதன் எதிரொலியால், கடலில் சுனாமி அலைகள் எழ வாய்ப்புள்ளதாகவும் பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் கூறியுள்ளது. இந்தோனேஷிய நிலநடுக்கத்தால் இந்தியாவில் எந்த பாதிப்பும் இல்லை என்று இந்திய சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. இந்தோனேஷியாவில் சுனாமி அலை உருவாகலாம் என எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் இந்திய சுனாமி எச்சரிக்கை மையம் தகவல் அளித்துள்ளது. 2004 டிசம்பரில் இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் தமிழக கடலோர பகுதிகள் பாதிக்கப்பட்டன.

scroll to top