இந்து கடவுள்கள் குறித்து இழிவாக பேசியவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் – திருவில்லிபுத்தூர் ஜீயர் முதல்வருக்கு கோரிக்கை

WhatsApp-Image-2023-05-12-at-13.00.27.jpg

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் கோவிலில் உள்ள ஸ்ரீமணவாள மாமுனிகள் மடத்தின் பீடாதிபதி ஸ்ரீசடகோபராமானுஜ ஜீயர், தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுத்து தகவல் வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தில் இந்து கடவுள்களை இழிவு படுத்தி சிலர் தொடர்ந்து பேசி வருகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீஆண்டாள் நாச்சியார் குறித்து அவதூறாக பேசினர். பின்னர் முருகக்கடவுள் குறித்து அவதூறாக பேசினர். தற்போது இதிகாசக் கடவுள்களான ராமர், சீதை, அனுமன் குறித்து விடுதலை சிகப்பி என்பவர் மிகவும் இழிவாக பேசி உள்ளார். இந்து கடவுள்கள் குறித்து இழிவாக பேசியவர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுத்து உடனடியாக கைது செய்ய வேண்டும். தமிழகத்தில் தொடர்ந்து இந்து கடவுள்கள் குறித்து அவதூறாகவும், இழிவாகவும் சிலர் பேசி வருவது தமிழக முதல்வருக்கு இருக்கும் நல்ல பெயரை கெடுக்கும் வகையில் இருந்து வருகிறது. எனவே இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுத்து உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று ஜீயர் தெரிவித்துள்ளார்.

scroll to top