75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவை இந்துஸ்தான் மருத்துவமனையில் மூத்த குடிமக்களுக்கான புதிய மருத்துவ சேவையான “சுவர்ணம்” என்ற ஹெல்த் கிளப்பை இந்துஸ்தான் கல்வி அறக்கட்டளை பொருளாளர் சரஸ்வதி கண்ணயன் மற்றும் இந்துஸ்தான் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் Dr. சதீஷ் பிரபு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலம் 60 வயது மற்றும் அதற்கு மேல் உள்ளவர்கள் இந்த ஹெல்த் கிளப்பில் இணைந்து இலவச ரத்தம் மற்றும் இதர பரிசோதனைகள், இலவச சிறப்பு மருத்துவரின் ஆலோசனை, நாள்பட்ட நோய்களுக்கான சிகிச்சைகள், அவசர சிகிச்சைக்கு வழிகாட்டுதல், ஆம்புலன்ஸ் உதவி, சிறப்பு மருத்துவரின் ஹெல்த் டிப்ஸ், உள்நோயாளி பிரிவில் சலுகை, மருத்துவமனையில் பிரத்யேக தனி உதவி மருத்துவ விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் வாய்ப்பு போன்ற பல நன்மைகளை பெறலாம். என இந்துஸ்தான் மருத்துவமனையின் பொது மற்றும் சர்க்கரை நோய் சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தெரிவித்தார். இந்நிகழ்வில் மருத்துவமனை மருத்துவர்கள்,ஊழியர்கள், “சுவர்ணம்” என்ற health checkup திட்டத்தில் பதிவு செய்திருந்த முதியவர்கள் என பலர் கலந்து கொண்டனர் .
இந்துஸ்தான் மருத்துவமனையில் புதிதாக முதியவர்களுக்கு “சுவர்ணம்” ஹெல்த் கிளப் தொடக்கம்
