”இந்திய தலைவர்கள் முஸ்லிம் பெண்களை ஓரங்கட்டுவது நிறுத்த வேண்டும்” நோபல் பரிசு வென்ற மலாலா தெரிவித்துள்ளார்

உடுப்பி மாவட்டம், குந்தாபுராவில் உள்ள அரசு பியூ கல்லூரியில் ஹிஜாப் அணிய பள்ளி நிர்வாகம் தடை விதித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த முஸ்லீம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வந்ததால் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதையடுத்து, மாநிலம் முழுவதும் உள்ள கல்லூரிகளில் ஹிந்து மாணவ – மாணவிகள் காவித் துண்டு அணிந்தும், முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வந்ததால் மோதல் நிலவியது. இதையடுத்து, பள்ளி, கல்லூரிகளுக்கு மூன்று நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.  இதுகுறித்து சமூக செயற்பாட்டாளரும், நோபல் பரிசு பெற்றவருமான மலாலா தனது டிவிட்டரில் பக்கத்தில்,“கல்லூரிகள் படிப்பிற்கும் ஹிஜாபிற்கு இடையே ஏதேனும் ஒன்றை தேர்வு செய்யும்படி நம்மை கட்டாயப்படுத்துகிறது. ஹிஜாப் அணிந்து மாணவிகள் பள்ளிக்கு வரக்கூடாது எனக் கூறுவது கொடுமையானது.  பெண்கள் மீதான புறக்கணிப்பு தொடர்கிறது. குறைவான ஆடை அணிந்தாலோ, முழுமையாக அணிந்தாலோ. இந்திய தலைவர்கள் இஸ்லாமிய பெண்களை ஓரங்கட்டுவதை நிறுத்த வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்

scroll to top