இந்திய செஸ் வீரர்களுக்கு ஆலோசகராகும் விஸ்வநாதன் ஆனந்த்

ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் தொடர் சீனாவின் ஹாங்சோ நகரத்தில் இந்த ஆண்டு செப்டம்பர் 10-ம் தேதி தொடங்கவுள்ளது. இந்நிலையில், இந்தியா சார்பில் பங்கேற்கும் செஸ் வீரர்களுக்கு, 5 முறை சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற விஸ்வநாதன் ஆனந்த் ஆலோசகராக பணியாற்ற உள்ளார். 12 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் இந்த தொடரில் பங்கேற்பதற்கான முதற்கட்ட 10 வீரர்கள் மற்றும் 10 வீராங்கனைகளை செஸ் கூட்டமைப்பு தேர்ந்தெடுத்துள்ளது. இவர்களுக்கு விஸ்வநாதன் ஆனந்த் அடுத்த வியாழக்கிழமை முதல் ஆலோசகராக செயல்படவுள்ளார்.

scroll to top