இந்திய சார்பில் தமிழ் படம் கூழாங்கல் ஆஸ்கர் விருதுக்கு தேர்வு


94-வது ஆஸ்கர் விருதுகள் அடுத்த ஆண்டு மார்ச் 27ம் தேதி நடைபெற உள்ளது. ஆஸ்கார் விருது பட்டியலில் ‘சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான’ பிரிவில் இந்திய திரைப்படம் ஒன்றை தேர்வு செய்யும் பணி கொல்கத்தாவில் நடைபெற்றது. இதில் ‘சர்தார் உத்தாம்’, ‘ஷேர்னி’, ‘செல்லோ ஷோ’, ‘நாயாட்டு’ மற்றும் தமிழ் படங்கள் ‘கூழாங்கல்’ ‘மண்டேலா’ உள்ளிட்ட 14 திரைப்படங்கள் ஆஸ்கர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில் இடம் பெற்றன. 2022ம் ஆண்டின் ஆஸ்கர் விருதுக்கு இந்தியாவின் கூழாங்கல் படம் அதிகாரப்பூர்வமாக தேர்வாகியுள்ளது. இப்படத்தை பி எஸ் வினோத்ராஜ் இயக்கியுள்ளார். தயாரிப்பா ளர் விக்னேஷ் சிவன் சமூக வலைத்தளங்களில் இந்த செய்தியை அனைவருடனும் பகிர்ந்து கொண்டார்.இந்த ஆண்டு ரோட்டர்டாமில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் கூழாங்கல் திரைப்படத்துக்கு “டைகர் விருது” பெற்றது.டைகர் விருதை வென்ற முதல் தமிழ் படம் கூழாங்கல். இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மண்டேலா திரைப்படம் திரையரங்குகளில் வெளி யாகாமல் நேரடியாக விஜய் டிவியில் வெளியா னது. அதன் பின்னர் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி நல்ல வர வேற்பை பெற்றது. மடோன் அஷ்வின் இயக்கத்தில் யோகி பாபு, ஷீலா, சங்கிலி முருகன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான மண்டேலா படத்தை ஒய் நாட் ஸ்டுடியோஸ் வழங்க பாலாஜி மோகன் தயாரித்திருந்தது குறிப் பிடத்தக்கது.

scroll to top