இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலக புதிய கட்டிடத்தை,மாநில செயலாளர் இரா. முத்தரசன் திறந்து வைத்தார்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகமான ரத்தனபுரி கட்சி கிளை அலுவலக புதிய கட்டிடத்தை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன் இன்று ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

முன்னதாக கட்சியின் மாநில துணை செயலாளர் கே. சுப்பராயன் எம்.பி., கட்சிக் கொடியை ஏற்றி வைத்தார். மாநில செயற்குழு உறுப்பினர் நா. பெரியசாமி தோழர் எம். கல்யாணசுந்தரம் படத்தை திறந்து வைத்தார்.எம்.கல்யாணசுந்தரம் நினைவாக கட்டப்பட்டுள்ள இந்த கட்டிட திறப்பு விழா நிகழ்ச்சிக்கு, கிளை செயலாளர் ஜி.தியாகராஜன் தலைமை தாங்கினார்.இதில் கட்சியின் மாவட்ட செயலாளர் வி.எஸ். சுந்தரம் மாவட்ட துணை செயலாளர் ஆர். தேவராஜ், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் ஆர்.சுதர்சன், மத்திய மண்டல செயலாளர் கே.ரவீந்திரன், ப.பா.ரமணி, ஜே.கலா மற்றும் கிளை நிர்வாகிகள் மற்றும் முக்கிய ஊழியர்கள் கே.ரங்கசாமி, ஆர்.சுப்பிரமணியம், எம்.காளிசாமி, கிருஷ்ணமூர்த்தி, சுகுணா சண்முகசுந்தரம், பொன்னுசாமி, கே.அன்புராஜ், நந்தகுமார், பாலசுப்பிரமணியம், பி. கதிர்வேல் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

scroll to top