இந்தியா – இலங்கை முதல் டெஸ்ட் கிரிக்கெட் நாளை தொடக்கம்

njn.jpg

இந்தியா – இலங்கை முதல் டெஸ்ட் கிரிக்கெட் நாளை தொடங்க உள்ளது. இந்த டெஸ்ட் போட்டியானது இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியின் 100வது டெஸ்ட் போட்டி என்பதால், கிரிக்கெட் ரசிகர்களிடையே மேலும் உற்சாகத்தையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி உள்ளது. 100வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் விராட் கோலிக்கு கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை கிரிக்கெட் அணியுடன் நடந்த 3டி20 போட்டிகளில் 3–-0 என இந்திய அணி தொடரை வென்றது. இதையடுத்து, இந்தியா- இலங்கை இடையிலான முதலாவது டெஸ்ட் நாளை பஞ்சாப் மாநிலம் மொகாலியில் தொடங்குகிறது. இந்த டெஸ்ட் போட்டியானது விராட் கோலிக்கு 100வது டெஸ்ட் மேட்ச் என்பதால் மேலும் சிறப்பு பெற்றுள்ளது. இந்த டெஸ்ட் போட்டிக்காக இந்திய அணி வீரர்கள் தீவிரமாக பயிற்சில் ஈடுபட்டு வருகின்றனர்.

scroll to top