இந்தியாவை பாதுகாக்க உறுதி ஏற்போம்’ – முதல்வர் ஸ்டாலின்

அம்பேத்கர் காட்டிய வழியில் சமத்துவமும் சமூகநீதியும் மேலோங்கி நிற்கும் இந்தியாவைப் பாதுகாக்க உறுதியேற்போம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்திய அரசியலமைப்பை உருவாக்கிய ‘சட்டமேதை’ டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி மத்திய அரசு சார்பில் அவருக்கு மரியாதை அளிக்கப்பட்டது. மேலும் அரசியல் தலைவர்கள் பலரும் அம்பேத்கரை நினைவுகூர்ந்து பதிவிட்டு வருகின்றனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘ஒடுக்கப்பட்டோரின் குரலாய் ஒலித்து, அவர்தம் உரிமைக்காகவும் விடுதலைக்காகவும் வாழ்நாளெல்லாம் பாடுபட்ட டாக்டர் அம்பேத்கர் நினைவுநாளில், அவர் காட்டிய வழியில் சமத்துவமும் சமூகநீதியும் மேலோங்கி நிற்கும் இந்தியாவைப் பாதுகாக்க உறுதியேற்போம்!’ என்று பதிவிட்டுள்ளார்.

scroll to top