இந்தியாவில் 320 மொபைல் செயலிகள்கள் முடக்கப்பட்டுள்ளன: அமைச்சர் தகவல்

App-Ban.jpg

பல்வேறு மொபைல் செயலிகள் தடை செய்யப்பட்டுள்ளது குறித்து பாராளுமன்றத்தில்  உறுப்பினரின் கேள்விக்கு மத்திய இணையமைச்சர் எழுத்து மூலம் பதில் அளித்தார். அதில்,  மத்திய அரசு இதுவரை இந்தியாவில் 320 மொபைல் அப்ளிகேஷன்களை முடக்கி இருப்பதாக தெரிவித்தார்.

இந்திய தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் (IT) கீழ் பயனர்களுக்கு பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மை உறுதி செய்யும் மொபைல் செயலிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு பாதுகாப்பற்ற  320 மொபைல் செயலிகள் இதுவரை தடை செய்யப்பட்டுள்ளன. கடந்த பிப்ரவரி மாதத்தில் 49 மொபைல் செயலிகள் மீண்டும் தடை செய்யப்பட்டன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

scroll to top