இந்தியாவில் 10,000 ZS EV விற்பனை – எம்ஜி மோட்டார் சாதனை

MG-ZS-EV-Shot-9-CHARGER.jpg

எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம், உலகளவில் அதன் வெற்றிகரமான ZS EV – மின்சார வாகனம் இந்தியாவில் விற்பனையில் 10,000 என்ற அளவைக் கடந்திருப்பதாக இன்று பெருமிதத்துடன் அறிவித்திருக்கிறது.  இந்தியாவின் முதல் பியூர் – எலக்ட்ரிக் இன்டர்நெட் SUV என்று அழைக்கப்படும் எம்ஜி ZS EV, இந்தியாவில் மின்சார வாகன ஆர்வலர்கள் மத்தியில் மிகப்பிரபலமான மின்சார வாகனம் என்ற நற்பெயரைப் பெற்றிருக்கிறது.  இந்த ஆல் நியூ ZS EV, 2 வேரியண்ட்களில் (எக்ஸைட்  & எக்ஸ்க்ளூசிவ்) முறையே ரூ. 23,38,000 மற்றும் 27,29,800 என்ற விலைகளில் கிடைக்கிறது.

மின்சார வாகனமான ZS EV சார்ஜிங் செய்வதற்கு 6 விருப்பத்தேர்வுகளுடன் வருகிறது: டிசி சூப்பர் – ஃபாஸ்ட் சார்ஜர்கள், ஏசி ஃபாஸ்ட் சார்ஜர்கள், எம்ஜி டீலர்ஷிப்களில் ஏசி ஃபாஸ்ட் சார்ஜர், ZS EV உடன் போர்ட்டபிள் சார்ஜர், மொபைல் சார்ஜிங் ஆதரவிற்கு ZS EV, 24X7 RSA, மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் கட்டமைப்பை வலுப்படுத்த 1000 நாட்களுக்குள் இந்தியாவெங்கிலும் சமூக அமைவிடங்களுக்குள் 1000 ஏசி ஃபாஸ்ட் சார்ஜர் சாதனங்களை நிறுவுவதை இலக்காக கொண்டிருக்கும் எம்ஜி சார்ஜ் இனிஷியேட்டிவ்.  ZS EV வாகன உரிமையாளர்களது இல்லம் அல்லது அலுவலகத்தில் கட்டணமின்றி இலவசமாக ஒரு ஏசி ஃபாஸ்ட் சார்ஜரை எம்ஜி இந்தியா நிறுவி வழங்குகிறது.  ஆல் – நியூ ZS EV, இப்போது இப்பிரிவிலேயே மிகப்பெரிதான 50.3kWH என்ற மேம்பட்ட தொழில்நுட்பம் கொண்ட பேட்டரியுடன் கிடைக்கிறது.  உலகளவில் மிகச்சிறந்த பாதுகாப்பு தரநிலைகளான ASIL-D என்பதை பூர்த்தி செய்யும் பேட்டரி இது.  மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு ஒருங்கிணைப்பு விலை, IP69K: சிறப்பான தூசி மற்றும் நீர் எதிர்ப்புத் திறன் தரநிலை & UL2580: பாதுகாப்பு மேலாண்மை அமைப்பு. வெறும் 8.5 நொடிகளுக்குள் மணிக்கு பூஜ்யத்திலிருந்து 100 கி.மீ. என்ற வேகத்தை எட்டுவதற்கு உதவுகின்ற இவ்வகையினத்தில் மிகச்சிறந்த 176PS ஆற்றலை வழங்குகின்ற புதிய சக்தி வாய்ந்த மோட்டார் இதில் இடம்பெற்றிருக்கிறது.  எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனத்தின் முதன்மையான எலக்ட்ரிக் SUV ஆன இது, சிறப்பான தூரத்திற்குப் பயணிக்கும் திறனையும் மற்றும் வாழ்நாள் காலஅளவையும் வழங்குகின்ற அதிக சக்தி செறிவாக இருக்கும் பிரிஸ்மாட்டிக் செல் பேட்டரியுடன் வெளிவருகிறது. 

scroll to top