இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் சாம்சங் ஏ சீரிஸ் ஸ்மார்ட்போன்

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ32 ஸ்மார்ட் போனின் மற்றொரு வேரி யண்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ32 ஸ்மார்ட் போனினை (6ஜிபி+128ஜிபி) இந்தியாவில் ரூ. 21,999 துவக்க விலையில் அறிமுகம் செய்து இருந்தது. தற்போது இந்த ஸ்மார்ட்போனின் 8ஜிபி+128ஜிபி மாடல் வெளியாகி இருக்கிறது. புதிய வேரியண்ட் விலை ரூ. 23,499 ஆகும்.
இந்த வேரியண்ட் ஆசம் பிளாக், ஆசம் புளூ மற்றும் ஆசம் வைலட் போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் சாம்சங் வலைதளம், முன்னணி ஆன்லைன் விற்பனை தளங்கள் மற்றும் சில்லறை விற்பனை மையங்களில் கிடைக்கிறது. சாம்சங் கேலக்ஸி ஏ32 அம்சங்களை பொருத்தவரை கேலக்ஸி ஏ32 மாடலில் 6.4 இன்ச் எப்.ஹெச்.டி. பிளஸ் சூப்பர் அமோலெட் இன்பினிட்டி யு டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி80 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம் வழங்கப்படுகிறது.
இத்துடன் ஆண்ட்ராய்டு 11 மற்றும் ஒன் யுஐ 3, புகைப்படங்களை எடுக்க 64 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 5 எம்பி மேக்ரோ கேமரா, 5 எம்பி டெப்த் லென்ஸ் மற்றும் 20 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது.

scroll to top