இந்தியாவில் புதிதாக 2 கொரோனா தடுப்பூசிகளுக்கு மத்தியஅரசு அனுமதி

நாடு முழுவதும் கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ள நிலையில்,ஒமிக்ரான் தொற்று அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலையில், 600க்கும் மேற்பட்டோருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தடுப்பூசி போடும் பணிகளை மத்தியஅரசு முடுக்கி விட்டுள்ளதுடன், கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளையும் தீவிரப்படுத்த மாநிலங்களுக்கு அறிவுறுத்தி உள்ளது. இந்த நிலையில், இந்தியாவில் பொதுமக்களின் அவசர கால பயன்பாட்டுக்கு கோவோவாக்ஸ் மற்றும் கார்பேவாக்ஸ் உட்பட மோல்னுபிராவிர் மருந்தை அங்கீகரிக்க பரிந்துரைக்கப்பட்டது. (சிடிஎஸ்சிஓ) இன் SEC (Subject Expert Committe) விஞ்ஞானிகளின் குழு, 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குப் பயன்படுத்துவதற்கான சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் கோவோவாக்ஸ் மற்றும் BIOLOGICAL E’s CORBEVAX தடுப்பூசிக்கு DCGI நிபந்தனை ஒப்புதலுக்கு பரிந்துரைத்திருந்தது. அதற்கு தற்போது ஒப்புதல் வழங்கப்பட்டுஉள்ளது. கார்பேவாக்ஸ் தடுப்பூசி என்பது ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட பயோலாஜிக்கல்-E நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட கொரோனாவுக்கு எதிரான உள்நாட்டில் உருவாக்கப்பட்ட RBD புரத துணை அலகு தடுப்பூசி ஆகும்.தற்போது இந்தியாவில் உருவாக்கப்பட்ட 3-வது தடுப்பூசி இதுவாகும். அதுபோல சீரம் நிறுவனம் தயாரித்துள்ள, நானோ துகள்கள் தடுப்பூசி கோவோவாக்ஸ். இது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 4 தடுப்பூசி. இந்த தடுப்பூசிகளுக்கு மத்தியஅரசு அனுமதி வழங்கி உள்ளது.மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (சிடிஎஸ்சிஓ) கொரோனா தடுப்பூசிகளான கோவோவாக்ஸ் & கார்பேவாக்ஸ் மற்றும் வைரஸ் எதிர்ப்பு மருந்தான மோல்னுபிராவிர் போன்றவற்றின் அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்துக்கு அனுமதி வழங்கியுள்ளது.

scroll to top