இந்தியாவில் எக்ஸான்மொபில் லூப்ரிகண்ட் உற்பத்தி ஆலை

Left-to-Right-Uday-Samant-Minister-of-Industries-of-Maharashtra-Monte-Dobson-Lead-Country-Manager-Affiliates-ExxonMobil-India-Devendra-F.jpg

மகாராஷ்டிரா தொழில் வளர்ச்சிக் கார்ப்பரேஷனுக்கு சொந்தமான ராய்காட்டில் உள்ள இசம்பே இன்டஸ்ட்ரியல் ஏரியாவில் ஒரு லூப்பிரிகண்ட் உற்பத்தி ஆலையை உருவாக்க கிட்டத்தட்ட ரூ 900 கோடி முதலீடு செய்வதாக எக்ஸான்மொபில் தெரிவித்துள்ளது. துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், தொழில்துறை அமைச்சர் உதய் சமந்த் மற்றும் மகாராஷ்டிர மூத்த அதிகாரிகள் முன்னிலையில் நிறுவனம் இந்த அறிவிப்பை செய்துள்ளது.

இது செயல்பாட்டுக்கு வந்தவுடன், உற்பத்தித்துறை, எஃகு, மின்சாரம், சுரங்கம் மற்றும் கட்டுமானம் மற்றும் அதேபோல பயணிகள் மற்றும் வர்த்தக வாகனப் பிரிவுகள் போன்ற தொழில்துறை துறைகளில் வளர்ந்து வரும் உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்வதற்காக ஆண்டுதோறும் 159,000 கிலோ லிட்டர் உயர்தர  லூப்ரிகண்ட்களை உற்பத்தி செய்யும் சாத்தியத்துடன் இந்த ஆலை திறன் கொண்டிருக்கும். இது 2025 ஆம் ஆண்டின் இறுதியில் செயல்படத் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்தியாவில் உள்ள எக்ஸான்மொபில் இணை நிறுவனங்களுக்கான நாட்டின் தலைமை மேலாளர் மான்டி டாப்சன் கூறும்போது  “எங்கள் முதல் கிரீன்ஃபீல்ட் முதலீட்டின் மூலம் இந்தியாவிற்கான எங்கள் நீண்டகால உறுதிப்பாட்டை மேலும் ஆழப்படுத்துவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். மஹாராஷ்டிர மாநிலம் இந்தியாவின் மிகப்பெரிய உற்பத்தி மையங்களில் ஒன்றாகும், மேலும் அதன் கவர்ச்சிகரமான முதலீட்டு சூழல் காரணமாக, எங்கள் லூப்ரிகண்ட் ஆலைக்கு இது இயற்கையான தேர்வாக உள்ளது,” என்று கூறினார். 

இந்த ஆலை “மேக் இன் இந்தியா” முன்முயற்சிக்கு ஒரு குறிப்பிடத்தக்க ஊக்கமாக அமைந்து, அடிப்படை பொருட்கள், சேர்க்கைகளின் பெரும்பகுதியையும் அனைத்து பேக்கேஜிங் பொருட்களையும் உள்நாட்டிலேயே கொள்முதல் செய்யும். இது கட்டுமான கட்டத்தில் கிட்டத்தட்ட 1,200 பேருக்கு வேலைகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எக்ஸான்மொபில் லூப்ரிகண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் உடைய தலைமை நிர்வாக அதிகாரி (CEO) விபின் ராணா பேசும்போது “இது இந்தியாவின் உயர் செயல்திறன் கொண்ட லூப்ரிகண்ட்களை வழங்கும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக எங்களின் நிலையை மேம்படுத்துவதற்கான ஒரு படி மாற்றமாகும். உள்நாட்டில் உற்பத்தி செய்வது எங்கள் விநியோகச் சங்கிலியை எளிதாக்கும், மேலும் எங்கள் இந்திய வாடிக்கையாளர்கள் மற்றும் நுகர்வோரின் தேவைகளுக்கு சேவை செய்வதை மிக எளிதாக்கும். இந்தியாவின் வளர்ச்சியை ஆதரிப்பதில் எங்களின் வளர்ந்து வரும் பங்கைப் பற்றி நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்று தெரிவித்தார்.

லூப்ரிகேஷன் தொழில்நுட்பத்தில் உலகளாவிய முன்னணி நிறுவனமான எக்ஸான்மொபிலின் பரந்த வரிசையிலான மொபில் பிராண்ட் என்ஜின் ஆயில்கள், கிரீஸ்கள் மற்றும் லூப்ரிகண்ட்கள் பல தசாப்தங்களாக இந்தியாவின் வாகன மற்றும் தொழில்துறைகளில் ஆற்றல் திறன், உற்பத்தித்திறன் மற்றும் நிலைத்தன்மையை மேம்படுத்தி வருகிறது. இந்நிறுவனம் இந்தியாவிற்கு திரவ இயற்கை எரிவாயுவின் முக்கிய விநியோகஸ்தராக உள்ளது மேலும் அதன் வேதியல் தயாரிப்புக்கள் இந்திய உற்பத்தித்துறையில் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன.  

scroll to top