இதுவரை இப்படி ஒரு கதையை கேட்கவில்லை – விஜய்

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 66வது திரைப்படம் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிப்பில் பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் அவரது படம் உருவாக இருப்பதாக கூறப்பட்டது. இப்போது படத்தின் திரைக்கதை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் இந்த படத்தின் கதைக்களம் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு சமீபத்தில் இந்த படத்தைப் பற்றி பேசியுள்ளார். அதில் ‘இந்த படத்தின் கதையை சொன்னபோது கடந்த 20 வருடங்களில் நான் கேட்ட மிகச்சிறந்த கதை என்று விஜய் பாராட்டினார். அனைவருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும். மார்ச் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கி தீபாவளி அல்லது பொங்கலுக்கு வெளியாகும்’ எனக் கூறியுள்ளார்.

scroll to top