இடையக்கோட்டை அருகே கிராம மக்கள் செய்த விநோத வழிபாடு

WhatsApp-Image-2023-05-06-at-12.49.08-PM.jpeg

திண்டுக்கல் மாவட்டம், இடையக்கோட்டை அருகே பாம்புக்கு பால் ஊற்றி, எறும்புக்கு சக்கரை வைத்து பக்தர்கள் வினோத வழிபாடு செய்தனர்.

ஒட்டன்சத்திரம், இடையக்கோட்டை அருகே, நாரப்பநாயக்கன்பட்டியில், சுயம்புவாக உருவான மண்புற்றை ரேணுகாதேவி அம்மனாக கருதி கிராம மக்கள் வணங்கி வழிபாடு நடத்தி வருகின்றனர். சித்ரா பவுணர்மியையொட்டி , ஏரளமான பக்தர்கள் நேற்று அங்கு குவிந்தனர். பின்னர் வரிசையாக வந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மண்புற்றில் வசிக்கும் பாம்புக்கு பால் ஊற்றியும், புற்றில் வாழும் எறும்பு மற்றும் கரையானுக்கு தண்ணீரில் அரிசி, சக்கரையை கலந்து வைத்தும் வினோத வழிபாடு செய்தனர்.

பொதுவாக கிராமங்களில், பெண்கள் தோஷம் நீங்க அரச மரத்துக்கு கீழே புற்று இருந்ததால், முட்டை, பால் ஆகியவை நாதருக்கு வைத்து வழிபடுவது, வழக்கத்தில் உள்ளது.

மதுரை அருகே, சோழவந்தான் வைகை ஆற்றங்கரையோரமாக, அமைந்துள்ள விசாக நட்சத்திர ஸ்தலமாக விளங்கும் பஇரளயநஆத சுவாமி ஆலயத்தில், பிராகரத்தில் அமைந்துள்ள அரசமர நாதருக்கு, தோஷம் நீங்க, பால், கோழி முட்டை வைத்து வழிபட்டு வருகின்றனர்.

scroll to top