இடைநிற்றல் பள்ளி மாணவிகள்; அதிகரிக்கும் சிறுமிகள் திருமணம்: கொரோனாவிற்குப் பின்பு ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்

Kumari-child-marriage.jpg

THE KOVAI HERALD

கொரானா தொற்று காலத்திற்குப் 18 வயது நிரம்பாத சிறுமிகளுக்கு திருமணம் நடப்பது அதிகரித்து வருகின்றன. இதனால் பள்ளிக்கு வரும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்துள்ள தாகவும் ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக மலைகிராமங் களில் இந்த சம்பவங்கள் அதிகம் நடந்து வருவதுதான் கொடுமை.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்துள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல், 35; என்பவருக்கும் வரும் பிப்ரவரி 6ம் தேதி ஜக்காம்பேட்டையில் உள்ள திருமண மண்டபத் தில் திருமணம் நடைபெற இருந்தது. இதற்காக இரு வீட்டாரும் திருமண ஏற்பாடுகளை செய்து வந்தனர்.
இந்த விஷயம் சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் லட்சுமிபதிக்கு தகவல் கிடைத்தது. அவர் விழுப்புரம் சமூகநலத்துறை மற்றும் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.அதன் பேரில், திண்டிவனம் அனைத்து மகளிர் போலீஸார் சிறுமியின் வீட்டிற்குச் சென்று விசாரித்தனர்.அதில், சிறுமிக்கு 17 வயது என்பது உறுதியானது. சிறுமியின் பெற்றோரிடம் பேசி திருமண வயதை எட்டவில்லை என விளக்கி திருமண த்தை நிறுத் தும்படி அறிவு றுத் தினர். தொடர்ந்து சிறுமியை மீட்டு குழந்தைகள் நலக் குழுமத்தில் ஒப்படைத் தனர். சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப் பட்டார்.
இதேபோல் கீழ வேளூர் அருகே சிறுமி களை திரு மணம் செய்த 2 இளைஞர் கள் பெற்றோர் கள் என 6 பேர் மீது வழக்குப் பதிவு செய்த னர் விசா ரணை. இது கீழ வேளூர் வட்டத்தில் ஆதியன் பழங்குடியினர் வசிக்கும் நீலாப்பாடி கிராமத்தில் போன மாதம் நடந்த சம்பவம்.
இதே போல் நெல்லை அருகே உள்ள மானூரை அடுத்த தடியம் பட்டியை சேர்ந் தவர் சமுத்திர பா ண்டி (வயது 25). தொழிலாளி. இவருக்கும் 18 வயது பூர்த்தி அடையாத சிறுமிக்கும் சில நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்த தகவல் கிடைத்த மானூர் யூனியன் சமூக நலத்துறை அலுவலர் வெள்ளத்தாய் நெல்லை புறநகர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தி, சமுத்திரபாண்டியை கைது செய்தனர். அந்த சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப் படைத்தனர்.
மேற்சொன்ன சிறுமிகள் எல்லாம் பள்ளிகளில் 8-வது முதல் 10-ம் வகுப்பு வரை படித்தவர்கள். கொரானா காலத்தில் பள்ளி இல்லாத காரணத்தால் வெளியே கூலிவேலைக்கு சென்று வந்துள்ளனர். பெற்றோரும் இனி இவர்களை படிக்க வைக்க வசதியில்லை என்ற காரணத்தால் திருமணம் செய்து கொடுக்க சம்மதித்துள்ள னர். இப்படி ஒன்றிரண்டு அல்ல, தமிழகத்தில் உள்ள அத்தனை மலை கிராமங்களி லும் ஊருக்கு 2 முதல் 10 சிறுமிகள் வரை திரு மணம் செய்து விட்ட தாக தகவல்கள் கிடைக்கிறது. அதில் புகார் கைது நடவடிக்கை என பார் த்தால் மிகச் சொற்பமே என்கிறார்கள் சிறுமிகள் குழந்தை கள் மீட்பில் ஈடுபடும் சமூக ஆர்வலர் கள். இது குறித்து சைல்டு லைன் அமைப்பை சேர்ந்த இளைஞர் கள் சிலர் கூறுகை யில், ‘‘குழந் தைத் திருமணம் செய்வது சட்டப்படி குற்றம் என்ற போதிலும், திருமணத்தின் மீதான இந்திய சமூகத்தின் பார்வை, சமூக-அரசியல்-பொருளாதார சூழல், சமூக சீர்திருத்த திட்டங்கள் கடைக்கோடியை சென்றடையாதது, விழிப்புணர்வின்மை உள்ளிட்ட காரணங்களால் இன்றளவும் இந்தியாவின் சிறு நகரங்களிலும், கிராமப்புறங்களிலும் குழந்தைத் திருமணங்கள் தினந்தோறும் நடந்தேறி வருகின்றன.
2019-ம் ஆண்டில் யுனிசெஃப் வெளியிட்ட ஆய்வறிக்கை தரும் புள்ளிவிவரங்கள் இதன் உண்மைத்தன்மையை உணர்த்துவதாக இருக்கிறது. உலகில் குழந்தைத் திருமணம் செய்யப்படும் மூன்று சிறுமிகளில் ஒருவர் இந்தியாவைச் சேர்ந்தவர். இந்தியாவில் குழந்தைத் திருமணம் செய்துவைக்கப்படும் சிறுமிகளில் பாதிக்கும் மேலானோர், உத்தர பிரதேசம், பிகார், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, மத்தியபிரதேச மாநிலங் களை சேர்ந்தவர்கள். குழந்தைத் திருமணம் செய்துகொண்ட 3.6 கோடி பெண்கள் உத் தரப்பிரதேசத்தில் இருப்ப தாக கூறுகிறது யுனிசெஃப்.
இந்நிலையில் ஆண்க ளுக்கு இணையாக பெண்களின் திருமண வயதை உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அப்படியிருந்தும் கூட சிறுமிகள் திருமணம் என்பது கிராமங்களில் அதிகரித்துள்ளதுஅதிர்ச்சியளிப்பதாக உள்ளது. எனவே சமூக நலத்துறை அதிகாரிகள் கிராமந்தோறும் சென்று இதில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்!’’ என்றனர்.

KAMALA KANNAN Ph. 9244319559

scroll to top